For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"கோலியை விட அவர் தான் 'டேஞ்சர்'.. நிக்கவிட்டா நீங்க காலி" - பாகிஸ்தானை எச்சரிக்கும் சீனியர் வீரர்

இஸ்லாமாபாத்: இந்திய அணியில் விராட் கோலியை விட ஆபத்தான பேட்ஸ்மேன் ஒருவர் இருக்கிறார் என்று பாகிஸ்தான் லெஜண்ட் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடர், இந்தியாவில்தான் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.

'கோலியை ஓரங்கட்டுங்க.. அடுத்த 2 உலக கோப்பைக்கு இவர்தான் பெஸ்ட்..' சுனில் கவாஸ்கர் சப்போர்ட் யாருக்கு'கோலியை ஓரங்கட்டுங்க.. அடுத்த 2 உலக கோப்பைக்கு இவர்தான் பெஸ்ட்..' சுனில் கவாஸ்கர் சப்போர்ட் யாருக்கு

இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், வரும் அக்டோபர் 24ம் தேதி, இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

 மொத்தம் 16 அணிகள்

மொத்தம் 16 அணிகள்

அக்டோபர் 17 முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் நவம்பர் 14ம் தேதி முடிவடைகிறது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறுகிறது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.

 மாலை 6 மணிக்கு

மாலை 6 மணிக்கு

குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

Recommended Video

RCB Vs RR | Virat Kohli Master Plan ,RCB Restrict Rajasthan Royals To 149/9 |Oneindia Tamil
 தோனி என்ட்ரி

தோனி என்ட்ரி

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், ரோஹித் சர்மா, விராட் கோலி (c), லோகேஷ் ராகுல், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பண்ட் (wk), இஷான் கிஷன் (wk), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மாற்று வீரர்களாக ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

 சாம்பியன்ஸ் டிராபி

சாம்பியன்ஸ் டிராபி

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பாகிஸ்தான் லெஜண்ட் முடஸ்ஸார் நாசர் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர், "நீங்கள் யார் பலமான அணி என்று பார்த்தால், நிச்சயமாக அது இந்தியா தான். அவர்கள் பாகிஸ்தானுக்கு முன்னால் இருக்கிறார்கள். ஆனால் 2017ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை சற்று நினைத்துப் பாருங்கள். பாகிஸ்தான் கோப்பையை வென்றது. அந்தத் தொடரில், லீக் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்றது. ஆனால், பாகிஸ்தான் அவர்களை இறுதிப் போட்டியில் தோற்கடித்தது.

 கோலியை விட அவர் டேஞ்சர்

கோலியை விட அவர் டேஞ்சர்

டி20 களில், ஒரு பேட்ஸ்மேன் ஓரளவு கணிசமான பங்களிப்பை கொடுத்தாலும், அல்லது ஒரு பந்துவீச்சாளர் சில விரைவான விக்கெட்டுகளை எடுத்தாலும், அது போட்டியை அப்படியே மாற்றிவிடும். டி20 கிரிக்கெட்டின் சாராம்சம் அது. சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் செயல்திறனைப் பார்த்தால், உண்மையில் யாரும் சிறப்பாக விளையாடவில்லை என்பேன். எப்போதும் ரன்களை குவிக்கும் விராட் கோலி, கடந்த 2-3 வருடங்களில் ஒரு முறை கூட அடிக்கவில்லை. அவரது செயல்திறன் சற்று குறைந்துள்ளது உண்மையில், என்னைப் பொறுத்தவரை கோலியை விட, ரோஹித் சர்மா தான் ஆபத்தானவர். கடைசியாக இந்தியாவும் பாகிஸ்தானும் 2019 உலகக் கோப்பை போட்டியில் மோதியபோது, ரோஹித் 140 ரன்கள் விளாசியதை நாம் மறந்துவிட முடியாது" என்று டி20 உலகக் கோப்பைத் தொடரை முன்னிட்டு, பாகிஸ்தான் வீரர்களை நாசர் எச்சரித்துள்ளார்.

Story first published: Thursday, September 30, 2021, 20:06 [IST]
Other articles published on Sep 30, 2021
English summary
Mudassar Nazar warns pakistan ahead of t20 world cup - கோலி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X