For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காயத்தால் நியூசி அதிரடி வீரர் விலகல்.. காயத்துக்கான காரணம் தெரிஞ்சா விழுந்து விழுந்து சிரிப்பீங்க

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை இதோ பைனல் வரை வந்து விட்டது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி இறுதிப்போட்டி வரை வந்து விட்ட நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் வருகிற 14-ம் தேதி கோப்பையை தட்டி தூக்குவதற்காக மோதுகின்றன.

Recommended Video

Devon Conway out of WC 2021 final with broken hand | OneIndia Tamil

இந்த இரு அணிகளும் இதுவரை டி20 உலககோப்பையை வென்றதில்லை. எனவே இந்த முறை ஒரு புதிய அணி உலககோப்பையை உச்சி முகர்ந்து பார்க்க போகிறது. அதுவும் நியூசிலாந்து அணி இதுவரை எந்த ஒரு ஐ.சி.சி கோப்பையையும் வென்றதில்லை.

நியூசிலாந்து அணியின் கோப்பை கனவு

நியூசிலாந்து அணியின் கோப்பை கனவு

பொதுவாக அனைவராலும் நேசிக்கப்படும் நியூசிலாந்து அணி அதிபலம் வாய்ந்த இங்கிலாந்தை தோற்கடித்து வந்துள்ளது. இந்த முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று நியூசிலாந்து கனவு கண்டு வருகிறது. நிலைமை இப்படி இருக்கும்போது நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மனுமான டெவோன் கான்வே காயம் காரணமாக இறுதிபோட்டியில் இருந்து விலகியுள்ளார். அத்துடன் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.

 டெவோன் கான்வே

டெவோன் கான்வே

'தனது தலையில் தானே மண்ணை வாரிபோடுவது' என்ற வாசகம் டெவோன் கான்வேவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். செமி பைனலில் இங்கிலாந்துக்கு எதிராக ரன்னை சேஸ் செய்தபோது டெவோன் கான்வே மிக சிறப்பாக விளையாடினார். 38 பந்தில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முக்கியமான கட்டத்தில் அவர் லிவிங்ஸ்டன் ஓவரில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

இது தேவையா?

இது தேவையா?

இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற டெவோன் கான்வே பேட்டின் மீது தனது கையால் மிக பலமாக குத்தினார். அத்துடன் சோகத்துடன் பெவிலியனுக்கு திரும்பினார். இதுதான் அவருக்கு வினையாக அமைந்துவிட்டது. இதனால் அவருக்கு கை விரலில் வலி அதிகமானதால், எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்பட்டது. அப்போது ஒரு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.இந்த காயத்தால் அவர் பைனலில் விளையாட முடியாமல் போய் விட்டது. ஏற்கனவே வேகப்புயல் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக தொடரில் விளையாடத நிலையில் டெவோன் கான்வேவும் முக்கியமான போட்டியில் ஆடாமல் இருப்பது நியூசிலாந்துக்கு பின்னடைவை எற்படுத்தி இருக்கிறது.

 மிகுந்த ஏமாற்றம் அளிக்கும்

மிகுந்த ஏமாற்றம் அளிக்கும்

இது தொடர்பாக நியூசிலாந்தின் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறுகையில், ''டெவோன் கான்வே நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதில் எப்பேதும் ஆர்வமாக இருப்பார். தற்போதையை நிலை அவருக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கும். டெவோன் ஒரு சிறந்த டீம்மேன். துரதிருஷ்டவசமாக அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.

Story first published: Friday, November 12, 2021, 20:37 [IST]
Other articles published on Nov 12, 2021
English summary
New Zealand wicketkeeper and action batsman Devon Conway has been ruled out of the T20 world cub final due to injury. He has also withdrawn from the series against India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X