For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

15 பந்துகளில் 6 விக்கெட்கள்.. கலக்கிய ட்ரென்ட் பவுல்ட்.. மொத்தமாக சரிந்த இலங்கை

கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த டெஸ்டில் நியூசிலாந்து வீரர் ட்ரென்ட் பவுல்ட் கலக்கலாக பந்துவீசி 15 பந்துகளில் 6 விக்கெட்கள் எடுத்தார். இலங்கை அணி மொத்தமாக இவரிடம் வீழ்ந்தது.

முதல் இன்னிங்க்ஸில் சுருண்ட நியூசி.

முதல் இன்னிங்க்ஸில் சுருண்ட நியூசி.

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்க்ஸில் 178 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது நியூசிலாந்து. அடுத்து இலங்கை அணி பேட்டிங் ஆடியது.

முதல் நாள் 4 விக்கெட்கள்

முதல் நாள் 4 விக்கெட்கள்

இலங்கை அணி முதல் நாள் முடிவில் 88 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து ஆடி வந்தது. இரண்டாம் நாள் துவக்கத்தில் அந்த அணி 6 ரன்கள் கூடுதலாக சேர்த்த நிலையில் ட்ரென்ட் பவுல்ட் பந்துவீச்சில் வரிசையாக சரியத் துவங்கியது.

45 நிமிடத்தில் சரிவு

45 நிமிடத்தில் சரிவு

முதல் நாள் பத்து ஓவர்கள் வீசி விக்கெட் எடுக்காமல் இருந்த பவுல்ட், இரண்டாம் நாளில் 15 பந்துகள் இடைவெளியில் 6 விக்கெட்களை வரிசையாக சாய்த்தார். இலங்கை அணி 88இல் இருந்து 104 ரன்கள் எடுப்பதற்குள் கடைசி 6 விக்கெட்களை இழந்தது. இந்த சரிவு 45 நிமிடங்களில் நிகழ்ந்தது. கடைசி நான்கு பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் அடிக்காமல் வெளியேறினர்.

இதுதான் சிறந்த பந்துவீச்சு

இதுதான் சிறந்த பந்துவீச்சு

ட்ரென்ட் பவுல்ட் 15 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தினார். இரண்டாம் நாளில் மட்டும் 5 ஓவர்கள் வீசி 4 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தினார். இதுவே இவரது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு ஆகும். இதற்கு முன் 32 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தி இருந்ததே சிறந்த பந்துவீச்சாக இருந்தது.

நியூசிலாந்து 305 ரன்கள் முன்னிலை

நியூசிலாந்து 305 ரன்கள் முன்னிலை

இதன் மூலம் முதல் இன்னிங்க்ஸில் 74 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி அடுத்து தன் இரண்டாம் இன்னிங்க்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. நியூசிலாந்து தற்போது 305 ரன்கள் முன்னிலையில் இருப்பதால், இலங்கை அணி இந்த போட்டியை வெல்வது மிகவும் கடினம்.

Story first published: Thursday, December 27, 2018, 12:37 [IST]
Other articles published on Dec 27, 2018
English summary
NewZealand’s Trent Boult took 6 wickets in 15 balls in test match against SriLanka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X