இந்தியா, இலங்கை, வங்கதேசம்.. முத்தரப்பு டி-20 தொடரில் இத்தனை சுவாரசியங்களா!

Posted By:
இன்றைய போட்டியில் இத்தனை சுவாரசியங்களா?- வீடியோ

கொழும்பு: இலங்கையில் இன்று இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி நடக்க இருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கும்.

இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும். இலங்கையின் 70வது சுதந்திர தின கொண்டாட்டம் காரணமாக இந்த போட்டி நடத்தப்பட இருக்கிறது.

இதற்கு நிதாஸ் கோப்பை போட்டி என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

எப்போது வரை

எப்போது வரை

இன்று தொடங்கும் போட்டி மார்ச் 8ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு அணியும் எதிரணியை 2 முறை எதிர்கொள்ளும். இதில் அதிக புள்ளிகள் பெரும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

ஓய்வு

ஓய்வு

இதில் இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. பேட்டிங்கில் கோஹ்லி, டோணி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கு பவுலிங்கில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

புதிய அணி

புதிய அணி

இந்திய அணியில் முகமது சிராஜ், ஷரத்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தர், ஜெயதேவ் உனட்கட், விஜய் சங்கர், ரிஷாத் பந்த், தீபா ஹூடா ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த உலகக்கோப்பை போட்டிக்கு இப்போதே தயார் ஆக இந்த அணி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்க்கு ரோஹித் தலைமைதாங்குவார்.

மோசமான நிலைமை

மோசமான நிலைமை

இலங்கை அணி ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் அணியில் இருந்து ஏஞ்சலோ மேத்தியூஸ் விலகி இருக்கிறார். அதேபோல் தினேஷ் டிக்வெல்லா அணியில் இருந்து விலகியுள்ளார். அந்த அணியில் பல வீரர்கள் மிகவும் புதியவர்கள்.

கொஞ்சம் பரவாயில்லை

கொஞ்சம் பரவாயில்லை

வங்கதேசம் அணி கொஞ்சம் நல்ல நிலையில் இருக்கிறது. அந்த அணி ஏற்கனவே இலங்கையுடன் மிகவும் சிறப்பாக விளையாடி பார்மை நிரூபித்துள்ளது. அந்த அணியில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. ஆனால் அதே காமெடி செய்யும் ரசிகர்கள், இலங்கைக்கும் வருவார்களா என்பது சந்தேகமே!

அணி விவரம்

அணி விவரம்

இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், ஷாஹல், தினேஷ் கார்த்திக், முகமது சிராஜ், ஷரத்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தர், ஜெயதேவ் உனட்கட், விஜய் சங்கர், ரிஷாத் பந்த், தீபா ஹூடா, மனிஷ் பாண்டே, அக்சர் பட்டேல், கேஎல் ராகுல், ரெய்னா, ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டு இருக்கிறது.

Story first published: Tuesday, March 6, 2018, 16:31 [IST]
Other articles published on Mar 6, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற