கோஹ்லி விக்கெட்டை எடுத்துவிட்டு கோபமாக திட்டிய ராணா.. கொல்கத்தா வீரரின் மோசமான செயல்!

Posted By:
நேற்றைய போட்டியில் கொல்கத்தா வீரரின் மோசமான செயல்- வீடியோ

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா வீரர் நிதீஷ் ராணா, பெங்களூர் கேப்டன் கோஹ்லி விக்கெட்டை எடுத்தார். விக்கெட் எடுத்த பின் கோஹ்லியை கோபமாக திட்டி ராணா பெவிலியன் அனுப்பினார்.

நேற்று நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது. இதில் கொல்கத்தா வீரர் நிதீஷ் ராணா மிகவும் சிறப்பாக விளையாடினார்.

ஒரே ஓவர் வீசி அவர் இரண்டு விக்கெட் எடுத்தார். அதே போல் பேட்டிங்கில் அவர் 25 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரி அடக்கம்.

யார் ராணா

யார் ராணா

தற்போது கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் நிதீஷ் ராணா, டெல்லியை சேர்ந்தவர். 2016ல் அறிமுகமான இவர் அப்போதில் இருந்து கொல்கத்தா அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். இவருக்கு 24 வயது மட்டுமே ஆகிறது. சென்ற ஐபிஎல் தொடரில் இவர் ஒரே ஒரு ஓவர் மட்டுமே போட்டார். நேற்று நடந்த போட்டியிலும் ஒரே ஒரு ஓவர் போட்டார்.

இரண்டு

இரண்டு

ஆனால் இவர் போட்ட ஒரே ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார். முதலில் டி வில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தி துள்ளி குதித்தார். அதே ஓவரில் பொறுமையாக ஆடிக்கொண்டு இருந்த கோஹ்லி விக்கெட்டையும் எடுத்து எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்தார்.

திட்டினார்

திட்டினார்

அவர் கோஹ்லி விக்கெட்டை எடுத்த போது, கோபத்தின் உச்சத்திற்கு சென்றார். உடனே கோஹ்லியை பார்த்து கோபமாக கத்தினார். எப்போதும் கோபமாக செயல்படும் கோஹ்லியே அதைப்பார்த்து அமைதியாக சென்றார். ஆனால் கோஹ்லியின் முகத்தில், இளம் வீரர் ஒருவர் அவமானப்படுத்திய சோகம் தெரிந்தது.

கோஹ்லி மனசு

கோஹ்லி மனசு

ஆனால் கோஹ்லி இந்த விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ளவில்லை. கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய வந்த போது, பெங்களூர் வீரர் குல்வந்த் ஓவரில் நிதிஷ் ராணா சிக்ஸ் ஒன்று அடித்தார். இந்த சிக்ஸ் மைதானத்தில் கடைசி இடத்தில் இருந்த ரசிகர்களிடம் சென்று விழுந்தது. இதை பார்த்து கோஹ்லி ஆச்சர்யப்பட்டு கைதட்டினார். கோஹ்லியின் இந்த செயலை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Nitesh Rana becomes famous after he took Kohli wicket in yesterday IPL match.
Story first published: Monday, April 9, 2018, 11:12 [IST]
Other articles published on Apr 9, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற