For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணிக்கு செக் வைத்த பிசிசிஐ.. 'ஏ+' வீரர்கள் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியது!

டோணியை பிசிசிஐ அமைப்பு 'ஏ+' வீரர்கள் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கி இருக்கிறது.

By Shyamsundar

டெல்லி: டோணியை பிசிசிஐ அமைப்பு 'ஏ+' வீரர்கள் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கி இருக்கிறது. இதன் மூலம் டோணி பெற்றுவந்த பல முக்கியமான சலுகைகளை இழக்க நேரிட்டு இருக்கிறது.

இதன் காரணமாக டோணியின் சம்பளம், ஐசிசி ரேட்டிங் என நிறைய விஷயங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பிசிசிஐ அமைப்பில் தற்போது முன்னாள் வீரர்கள் சிலர் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள்.

ஏற்கனவே டோணிக்கும் முன்னாள் வீரர்களுக்கு பிரச்சனை நிலவி வந்த காரணத்தால் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது.

வீரர்கள்

வீரர்கள்

கிரிக்கெட் உலகில் மொத்தம் 'ஏ+, ஏ, பி, சி' நான்கு விதமான வீரர்கள் இருக்கிறார்கள். இதில் ஏ+ வீரர்கள் மிகவும் அதிக அளவில் சம்பளம் வாங்குவார்கள். டோணி, கோஹ்லி, ரோஹித், அஸ்வின் போன்ற முக்கியமான வீரர்கள் மட்டும் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். அனுபவத்தையும், விளையாட்டையும் பொறுத்து இந்த கிரேட் மாற்றப்படும்.

டோணி நீக்கப்பட்டார்

டோணி நீக்கப்பட்டார்

இவ்வளவு நாள் ஏ+ வீரராக இருந்து வந்த டோணி தற்போது அந்த கிரேடில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இனி இவர் ஏ கிரேட் வீரர் மட்டுமே என்று கூறப்பட்டு இருக்கிறது. நேற்று நடந்த பிசிசிஐ கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இவரது சம்பளமும் குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

காரணம் என்ன

காரணம் என்ன

இவரது விளையாட்டு திறமையில் எந்த வித பிரச்சனையும் இல்லை. மாறாக ஏ+ கிரேட் எடுப்பதற்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வேண்டும். மாறாக டோணி டெஸ்ட் போட்டியில் ஒய்வு பெற்றும் ஏ+ கிரேடில் விளையாடி வந்தார். தற்போது சில வீரர்களின் அழுத்தத்தின் காரணமாக அவர் ஏ+ கிரேடில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

அஸ்வின்

அஸ்வின்

இதேபோல் அஸ்வின், ஜடேஜா போன்ற வீரர்களும் ஒருநாள் போட்டியில் விளையாடுவதில்லை. ஆனால் அவர்கள் இந்திய அணியின் ''ரொட்டேஷன் பாலிசி'' காரணமாகவே விளையாடாமல் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் இருவரும் ஏ+ கிரேடில் தொடர்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Story first published: Thursday, January 4, 2018, 13:36 [IST]
Other articles published on Jan 4, 2018
English summary
Former India captain Mahendra Singh Dhoni is likely to miss out on the Board of Control for Cricket in India (BCCI) top central contract, according to reports. The Committee of Administrators (CoA) has devised a four-grade contract formula for the players. A+, A, B, C are the four grades in which players will be divided and will get the much-awaited pay hike accordingly. As per the new guidelines, players playing in all formats will be given the A+ contract and since Dhoni no more plays Test cricket, he might not get the top contract.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X