For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேட்டிங்கே சரியில்ல.. எப்படி பவுலிங்கை குறை சொல்றது..? வெறுப்பின் உச்சத்துக்கே போன கேப்டன்

செஸ்டர் லீ ஸ்டீரீட்: பேட்டிங்கால் தான் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் தோற்றதாக இலங்கை கேப்டன் கருணரத்னே கூறியிருக்கிறார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் மோதின.முக்கியத்துவம் இல்லாத இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பவுலிங் செய்தது.

இதனையடுத்து முதலில் பேட் செய்ய களமிறங்கிய இலங்கை அணியில் வீரர்கள் சொதப்பினர். தென் ஆப்ரிக்கா பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர். அதனால் 49.3 ஓவரில் வெறும் 203 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டி காக் ஏமாற்றம்

டி காக் ஏமாற்றம்

204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணியில் டி காக் 15 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால், அதன் பின் டூபிளசிஸ், ஆம்லா ஜோடி சேர்ந்து, இலங்கை பந்து வீச்சை அசால்டாக கையாண்டனர்.

நிதான வெற்றி

நிதான வெற்றி

அவர்கள் நிதானமாக இருந்ததால் 37.2 ஓவரிலேயே இலக்கை அடைந்த தென் ஆப்ரிக்கா, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் இலங்கை அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்தது.

எதிர்பார்ப்பு வீணானது

எதிர்பார்ப்பு வீணானது

தோல்வி குறித்து இலங்கை கேப்டன் கருணரத்னே கூறியிருப்பதாவது: எங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் போட்டியில் தவறாகிவிட்டது. பேட்டிங், பந்துவீச்சு பீல்டிங் என எதிலுமே நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை.

ஒத்துழைப்பு இல்லை

ஒத்துழைப்பு இல்லை

குஷால் மற்றும் அவிக்ஷா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தாலும், மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை இதுவே தோல்விக்கு மிகப்பெரும் காரணம். வெறும் 200 ரன்களை மட்டும் எடுத்துவிட்டு பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்லி ஒரு பிரயோஜனமும் கிடையாது.

பேட்டிங்கே காரணம்

பேட்டிங்கே காரணம்

தோல்விக்கு பொறுப்பற்ற பேட்டிங்கே முக்கிய காரணம். இந்த தொடரின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். அதன் மூலம் இலங்கை அணியில் வரும் காலங்களில் நல்ல முன்னேற்றங்கள் நிகழும் என்றார்.

Story first published: Saturday, June 29, 2019, 14:20 [IST]
Other articles published on Jun 29, 2019
English summary
We didn’t play well against south africa in a crucial match says srilanka captain karunaratne.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X