For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் வெளிமாநில வீரர்களுக்கு அனுமதி இல்லை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகளில், தமிழக கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்து இருக்கும் வீரர்கள் மட்டுமே விளையாட வேண்டும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

By Shyamsundar

Recommended Video

TNPL-ல் வெளிமாநில வீரர்களுக்கு அனுமதி இல்லை...உச்சநீதிமன்றம் அதிரடி- வீடியோ

டெல்லி: தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகளில், தமிழக கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்து இருக்கும் வீரர்கள் மட்டுமே விளையாட வேண்டும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தியா முழுக்க ஐபிஎல் போட்டிகள் எப்படி வைரலோ அதேபோல் தமிழகத்தில் தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகளும் வைரல்தான். இந்த தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகள் கடந்த வருடம் மிகவும் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த நிலையில் இந்த வருட போட்டிகள் இன்று தொடங்க உள்ளது.

OUT for other state players in Tamilnadu premier league orders Supreme Court

இந்த நிலையில் இந்த தொடரில் தமிழக மாவட்ட அணிகளில் சிலர் வெளி மாநில விளையாட்டு வீரர்களை ஆட வைக்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் போர்ட் விரும்பியது. இதற்காக மற்ற கிரிக்கெட் போர்டுகளில் பேசி ஒப்புதல் வாங்கியது. அந்த வீரர்களும் தமிழக மாவட்ட அணிகளுக்காக விளையாட தயாரானார்கள்.

இந்த நிலையில் இதற்கு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள் குழு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது.இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகளில், தமிழக கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்து இருக்கும் வீரர்கள் மட்டுமே விளையாட வேண்டும், மற்ற மாநில வீரர்கள், மற்ற மாநில கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்த வீரர்கள் விளையாட முடியாது என்று கூறியுள்ளனர்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனாலும் டிஎன்பிஎல் போட்டிகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இன்று வழக்கம் போல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Story first published: Wednesday, July 11, 2018, 16:09 [IST]
Other articles published on Jul 11, 2018
English summary
OUT for other state players in Tamilnadu premier league orders Supreme Court.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X