For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை பஞ்சாயத்திற்கு தீர்வு.. பாக். வாரிய தலைவர் கொடுத்த புதிய அப்டேட்.. ஃபிப்.4 தான் கடைசி

ஆசிய கோப்பை தொடரை எங்கு நடத்துவது என்பது குறித்து பாகிஸ்தான் வாரியம் புதிய தகவலை கொடுத்துள்ளது

லாகூர்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடத்துவதா? வேறு நாட்டிற்கு மாற்றுவதா? என்ற குழப்பம் நீடித்து வரும் சூழலில் அதுகுறித்து அந்நாட்டு வாரிய தலைவர் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் தான் பெரும் பரபரப்பு இருக்கும் என்று பார்த்தால், போட்டியை நடத்துவதிலேயே தற்போது மறைமுக யுத்தம் நடைபெற்று வருகிறது.

2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. அதன்படி இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் ஆசிய கோப்பை நடைபெறவுள்ளது.

ஏன்யா இப்படி பண்ற??.. பேச்சை கேட்காமல் தவறு செய்த ஷர்துல் தாக்கூர்.. களத்திலேயே விளாசிய ரோகித்! ஏன்யா இப்படி பண்ற??.. பேச்சை கேட்காமல் தவறு செய்த ஷர்துல் தாக்கூர்.. களத்திலேயே விளாசிய ரோகித்!

சர்ச்சை

சர்ச்சை

ஆனால் அதற்கு ஆப்பு வைத்தார் ஆசிய கவுன்சில் தலைவர் ஜெய் ஷா. அதாவது அந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று அறிவித்தார். மேலும் ஆசிய கோப்பை தொடரை வேறு நாட்டிற்கு மாற்றி வைக்க உள்ளதாகவும் கூறினார். இதனால் கடும் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் வாரியம், இந்தியா வரவில்லை என்றால், இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பைக்கு பாகிஸ்தான் வராது என பகிரங்கமாக அறிவித்தது.

புதிய அப்டேட்

புதிய அப்டேட்

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படாமலேயே உள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு முடிவு எட்டப்படவுள்ளது. செய்தியாளர்களிடம் பேசியுள்ள பாக். வாரிய தலைவர் நஜம் சேதி, ஆசிய கவுன்சில் கூட்டத்திற்காக தான் காத்துக்கொண்டிருந்தேன். அது ஃபிப்ரவரி 4ம் தேதி பக்ரைனில் நடைபெறவுள்ளது. அங்கு பாகிஸ்தானின் நிலைபாடு குறித்து விவாதித்து தீர்வை எட்டுவோம் எனக்கூறியுள்ளார்.

பிசிசிஐ நிபந்தனை

பிசிசிஐ நிபந்தனை

இந்தியாவை பொறுத்தவரையில் ஒரே ஒரு நிபந்தனையில் தெளிவாக உள்ளது. அதாவது ஆசிய கோப்பை தொடருக்காக பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லாது. ஆனால் இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைக்கு பாகிஸ்தான் வர வேண்டும். அப்போது தான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி எனக்கூறி வருகிறது. இது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

50 ஓவர் உலகக்கோப்பை இந்தாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் செப்டம்பர் மாதத்தில் ஆசிய கோப்பை தொடரை நடத்தவுள்ளனர். குறிப்பாக 50 ஓவர் வடிவ கிரிக்கெட்டாக இது நடைபெறவுள்ளது. விரைவில் போட்டிகள் எங்கு நடக்கிறது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என ரசிகர்கள் காத்துள்ளனர்.

Story first published: Wednesday, January 25, 2023, 11:50 [IST]
Other articles published on Jan 25, 2023
English summary
Pakistan Cricket Council president Najam sethi gives a new update on Asia cup 2023 controversies, here is the full details
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X