அண்டர்-19 கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காததால் தூக்கிட்டு தற்கொலை.. பாகிஸ்தானில் சோகம்

Posted By:

கராச்சி: பாகிஸ்தானில் அண்டர்-19 கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காததால் முகமது சர்யாப் என்ற வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இவரது தந்தை அமீர் ஹனீப் இதுகுறித்து விசாரணை நடந்த வேண்டும் கோரிக்கை வைத்துள்ளார். அமீர் ஹனீப் பாகிஸ்தான் அணிக்காக 90களில் விளையாடி இருக்கிறார்.

அவர் 5 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவர் மகன் தற்கொலை செய்துள்ளார்.

முன்பே சொன்னார்

முன்பே சொன்னார்

நேற்று முதல் நாளே முகமது சர்யாப் வீட்டில் சாப்பிடும் போது இதுகுறித்து மறைமுகமாக பேசியுள்ளார். அப்போது ''கிரிக்கெட் உலகில் யாருமே சரியில்லை. நிறைய அரசியல் இருக்கிறது. எல்லோரும் ஏமாற்றுகிறார்கள். எனக்கு பிடிக்கவேயில்லை'' என்றுள்ளார். அவர் பேசுவது அமீர் ஹனீபிற்கு புரியாமல் இருந்துள்ளது.

மறுநாளே மரணம்

மறுநாளே மரணம்

இந்த நிலையில் மறுநாளே அவர் தூக்கு மாட்டி அவர் அறையில் தற்கொலை செய்துள்ளார். போலீஸ் இந்த வழக்கை தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ளது. அமீர் ஹனீப் இதுகுறித்து முறையாக இன்னும் வழக்கு பதியவில்லை.

காயம்

காயம்

முகமது சர்யாப்புக்கு சில மாதம் முன்பு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. மிகவும் சிறிய காயமே ஏற்பட்டு உள்ளது. ஆனால் இவர் கோச் இவரை 2 மாதம் ஓய்வு எடுக்க சொல்லி இருக்கிறார். பயிற்சி செய்யவும் வேண்டாம் என்றுள்ளார்.

அணியில் இடம் இல்லை

அணியில் இடம் இல்லை

இதனால் பாகிஸ்தான் அண்டர் 19 அணியில் அவருக்கு இடம் கிடைக்காமல் போகும். அவரைவிட திறமை குறைந்த வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும் என்று நண்பர்களிடம் புலம்பி இருக்கிறார். இதனால்தான் அவர் தற்கொலை செய்து இருப்பார் என்றும் கூறியுள்ளனர்.

Story first published: Wednesday, February 21, 2018, 11:48 [IST]
Other articles published on Feb 21, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற