For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மார்பில் பந்து தாக்கி... பாகிஸ்தானில் 18 வயது கிரிக்கெட் வீரர் மரணம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியின்போது பந்து தாக்கி, வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாதம், கிரிக்கெட் போட்டியின் போது பந்து தாக்கியதால் ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் மரணமடைந்தார். இந்நிலையில், தற்போது பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர் ஒருவர் பந்து தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Pakistan Cricketer Dies As Fast Ball Hits Him

பாகிஸ்தானில் கராக்கி அருகேயுள்ள ஓரங்கி நகரில் கிளப் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வீசிய பந்து, 18 வயது இளம் வீரர் ஜீஷன் முகமதுவின் மார்பகப் பகுதியை தாக்கியது. அதில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மற்ற வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆஸ்திரேலிய சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானிலும் போட்டியின் போது பந்து தாக்கி விளையாட்டு வீரர் உயிரிழந்த சம்பவம், கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாகியுள்ளது.

Story first published: Tuesday, January 27, 2015, 11:51 [IST]
Other articles published on Jan 27, 2015
English summary
A Pakistani batsman has to face sudden death following a fast bowl hits him on chest.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X