விதிமுறைக்கு மாறான பந்துவீச்சு புகார் -இசிபி போட்டிகளில் விளையாட தடை

இஸ்லாமாபாத் : விதிமுறைக்கு மாறாக பந்து வீசிய புகாரில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஹபீஸ் இசிபி போட்டிகளில் பந்துவீசுவதில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளரான முகமது ஹபீஸ் தவறாக பந்து வீசுவதாக கடந்த 2005 முதல் பல முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஐசிசி சோதனைக்கு பின்பு மீண்டும் அனுமதி பெற்றுள்ளார்.

இந்நிலையில் இசிபி போட்டிகளில் ஏபி டீ வில்லியர்சுக்கு பதில் விளையாடிவந்த ஹபீஸ், கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தவறான பந்துவீச்சு புகாரில் மீண்டும் சிக்கி லோபோரா யூனிவர்சிட்டியின் சோதனைக்கு உள்ளாகி தற்போது பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளார்.

விதிமுறைக்கு மாறான பந்துவீச்சு

விதிமுறைக்கு மாறான பந்துவீச்சு

பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் முகமது ஹபீஸ் விதிமுறைகளுக்கு மாறாக பந்து வீசுவதாக கடந்த 2005 முதல் குற்றம் சாட்டப்பட்டு ஐசிசி சோதனைகளுக்கு பின்பு மீண்டும் அனுமதி பெறுவது வாடிக்கையாக உள்ளது.

இசிபி போட்டிகளில் விளையாட தடை

இசிபி போட்டிகளில் விளையாட தடை

பாகிஸ்தான் மற்றும் மிடில்செக்சின் ஆல் ரவுண்டராக வலம்வந்துக் கொண்டுள்ள சுழற்பந்து வீச்சாளர் முகமது ஹபீஸ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இவர் தற்போது இங்கிலாந்தின் இசிபி போட்டிகளில் விளையாடி வந்தார்.

தவறான பந்துவீச்சு புகார்

தவறான பந்துவீச்சு புகார்

இசிபி போட்டிகளில் ஏபி டீ வில்லியர்சுக்கு மாற்றாக மிடில்செக்ஸ் அணியில் விளையாடிவந்த முகமது ஹபீஸ், சோமர்செட் அணிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி டான்டன்னில் நடைபெற்ற போட்டியில் தவறான பந்துவீச்சு புகாருக்கு உள்ளானார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஹபீஸ்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஹபீஸ்

இந்த புகாரையடுத்து லோபோரா பல்கலைகழகத்தின் சோதனைக்கு உள்ளான ஹபீஸ், விதிமுறைக்கு மாறான பந்து வீசியது நிரூபணமாகி, தற்போது இசிபி போட்டிகளில் விளையாடுவதில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

என்னை நிரூபிப்பேன் -ஹபீஸ்

என்னை நிரூபிப்பேன் -ஹபீஸ்

இசிபியின் இந்த சோதனை முடிவை ஏற்பதாக தெரிவித்துள்ள முகமது ஹபீஸ், இதையடுத்து ஐசிசி சோதனைக்கு உட்பட்டு தன்னை நிரூபிப்பேன் என்றும் மீண்டும் இசிபி போட்டிகளில் விளையாடுவேன் என்றும் குறிப்பிட்டள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Mohammad Hafeez suspended to Bowling in All ECB Competitions
Story first published: Wednesday, December 25, 2019, 17:28 [IST]
Other articles published on Dec 25, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X