மீண்டும் இந்தியா - பாக் கிரிக்கெட் தொடர்.. முன்னாள் வீரர் வைத்துள்ள கோரிக்கை.. ஆஷஸ் தொடருக்கே சவால்!

மும்பை: நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் தொடரை ரசிகர்கள் காண வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி தற்போது இங்கிலாந்துடனான சுற்றுப்பயணம், இதன் பிறகு ஐபிஎல், தொடர் என பிசியாக உள்ளது.

தேவைப்பட்டால் அதை செய்வேன்.. நியூசிலாந்து போட்டிக்கு துணை கேப்டன் ரஹானேவின் திட்டம்.. முழு விவரம்!

இந்நிலையில் பாகிஸ்தான் அணியுடன் ஒரு கிரிக்கெட் போட்டி தொடரை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் வீரர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஏக்கம்

ஏக்கம்

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்து வந்த அரசியல் ரீதியான பிரச்னைகள் காரணமாக இரு நாட்டு அணிகளும் தனிப்பட்ட தொடர்களில் மோதிக்கொள்ளாமல் இருந்து வருகிறது. கடைசியாக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடந்த 2012 - 2013ம் ஆண்டு காலக்கட்டத்தில் போட்டி தொடர் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வருகை தந்து டெஸ்ட் தொடரில் விளையாடியது.

ஆசியக்கோப்பை

ஆசியக்கோப்பை

இரு நாட்டு பிரச்னை காரணமாக ஆசியக்கோப்பை , உலகக்கோப்பை போன்ற ஐசிசி நடத்தும் தொடர்களில் 2 அணிகளும் மோதி வருகின்றன. நீண்ட நாட்களாக இதுபோன்ற சர்வதேச கோப்பைக்கான தொடர்களில் மட்டும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

எதிர்பார்ப்பு அதிகம்

எதிர்பார்ப்பு அதிகம்

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் தொடர் மீண்டும் நடைபெற வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் அக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஆஷஸ் தொடரை விட ரசிகர்கள் அதிகம் விரும்பும் தொடராக இந்தியா - பாகிஸ்தான் தொடர் அமையும். போட்டியின் ஒவ்வொரு ஓவரையும் ரசித்து பார்ப்பார்கள். ஆசியக்கோப்பை மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான தனிப்பட்ட போட்டிகள் நடத்துவது மிக முக்கியம்.

தொடர் வேண்டும்

தொடர் வேண்டும்

ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. ஆசியக்கோப்பையில் உலகின் டாப் அணிகள் மோதிக்கொள்ளும். அதிக தரம் வாய்ந்த போட்டிகளில் வீரர்கள் விளையாடும் போது, அவர்களின் முழு திறமை வெளிப்படும். இந்தியா - பாகிஸ்தான் தொடர் நடைபெற்றால் வீரர்கள் தங்களது முழு முயற்சியையும் அதற்காக செய்வார்கள். ஏனென்றால் அந்த போட்டியின் முக்கியத்துவத்தைஅவர்கள் உணர்வார்கள். ரசிகர்களிடம் அதிக பாராட்டுக்களை பெறுவார்கள் எனத்தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Pakistan Former Player Inzamam-ul-Haq Requested India - pakistan Series should Resume
Story first published: Thursday, June 10, 2021, 16:57 [IST]
Other articles published on Jun 10, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X