For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட பாக். அணிக்கு அரசு அனுமதி

கராச்சி: இந்தியாவில் நடைபெறும் டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட அந்த நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் பாகிஸ்தான் அணிக்கு சிறப்புப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் இந்திய அரசை பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் அடுத்த மாதம் உலகக் கோப்பை டுவென்டி 20 போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.

Pakistan government gives consent for team to play World T20 in India

இந்தத் தொடரில் பாகிஸ்தான் கலந்து கொள்ளுமா என்பதில் குழப்பம் நிலவி வந்தது. பாகிஸ்தான் அரசு அனுமதிக்காக காத்திருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷஹாரியார் கானும் கூறி வந்தார். இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அரசு அனுமதி தந்து விட்டதாக ஷஹாரியார் கான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவுக்கு சென்று போட்டித் தொடரில் பங்கேற்க எங்களது அரசு சம்மதம் தெரிவித்து விட்டது. மேலும் பாகிஸ்தான் கிரி்க்கெட் அணிக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை, சிறப்பு ஏற்பாடுகளை செய்யவும் அரசு கேட்டு்க கொண்டுள்ளது. அதை நாங்கள் ஐசிசிக்குத் தெரிவித்துள்ளோம் என்றார்.

மார்ச் 16ம் தேதி தரம்சலாவில் குவாலிபயர் போட்டியில் ஆடுகிறது பாகிஸ்தான். அதைத் தொடர்ந்து அதே மைதானத்தில் 19ம் தேதி இந்தியாவுடன் மோதவுள்ளது.

Story first published: Thursday, February 25, 2016, 18:04 [IST]
Other articles published on Feb 25, 2016
English summary
The Pakistan government today allowed its cricket team to participate in next month's World Twenty20 in India but has requested "special security arrangements" for the side during the event.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X