For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பையில் பலமுறை குறைந்த ஸ்கோர் செய்த பாகிஸ்தான்..!! இப்படியும் ஒரு ரெக்கார்டா...?

லண்டன்:உலக கோப்பை தொடரில், பாகிஸ்தான் நேற்றைய போட்டியில் மட்டுமல்லாது பல முறை இதுபோன்று குறைந்த ஸ்கோரை எட்டி இருக்கிறது. அது பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

பெருத்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியுள்ள உலக கோப்பை கிரிக்கெட் எதிர்பாராத திருப்பங்களை தரும் போல தெரிகிறது. அதிலும் பாகிஸ்தான் அணிக்கு நடப்பு உலக கோப்பை தொடரை சிறப்பானதாக தொடங்க வில்லை என்றே சொல்லலாம்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 105 ரன்களுக்கு சுருண்டது. நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹோல்டர் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

படுதோல்வி அடைந்த பாக்... டிக்கெட் காசை திருப்பி வாங்கும் பாக். ரசிகர்கள்.. உலகக்கோப்பை பரபரப்பு!! படுதோல்வி அடைந்த பாக்... டிக்கெட் காசை திருப்பி வாங்கும் பாக். ரசிகர்கள்.. உலகக்கோப்பை பரபரப்பு!!

 துல்லியமான பவுலிங்

துல்லியமான பவுலிங்

மைதானத்தின் தன்மையை சரியாக கணித்த மேற்கிந்தியத் தீவுகள் பவுலர்கள் துல்லியமாக பந்து வீசினர். ஆனால், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அதில் கோட்டை விட்டனர். ஓசானே தாமஸ் தனது சிறப்பான பவுலிங்கில் அசத்தி, 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

 பாக். உலக கோப்பை வரலாறு

பாக். உலக கோப்பை வரலாறு

அதில் பாகிஸ்தான் மொத்தமாக 105 ரன்களே குவித்தது. உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணியின் 2வது குறைவான ரன்கள் இதுவாகும். உலக கோப்பை வரலாற்றில் அந்த அணி எடுத்த குறைவாக ரன்களை பற்றி பார்க்கலாம்.

 74 ரன்களுக்கு ஆல் அவுட்

74 ரன்களுக்கு ஆல் அவுட்

1992ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் மிக குறைந்த ரன்கள் அடிக்கப்பட்டது. இந்த போட்டியில் 74 ரன்களில் அனைத்து விக்கெட்டு களையும் இழந்து பாகிஸ்தான் வெளியேறியது.

 மழையால் கைவிடல்

மழையால் கைவிடல்

இங்கிலாந்து சார்பில் போத்தம், ஸ்மால், டி பிரெடிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிரிங்கில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும் இப்போட்டி மழையினால் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

 உலக சாம்பியன்

உலக சாம்பியன்

பாகிஸ்தான் அணி அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி அட்டவனணயில் முதலிடத்தை பிடித்தது. அத்துடன் 1992ம் உலக கோப்பையை இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

 105 ரன்களுக்கு சுருண்டது

105 ரன்களுக்கு சுருண்டது

பாகிஸ்தான் அணி 2019ம் ஆண்டு உலக கோப்பையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தனது முதல் போட்டியில் 105 ரன்களுக்கு சுருண்டது. இந்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் பவுன்சர்களுக்கு பாகிஸ்தான் நிலை குலைந்தது.

 சூப்பர் தாமஸ்

சூப்பர் தாமஸ்

மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் ஓசானே தாமஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேற்கிந்திய தீவுகளின் கேப்டன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ஆல் ரவுண்டர் ஆன்ரிவ் ரஸல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 மோர்கன் 2 ரன்கள்

மோர்கன் 2 ரன்கள்

அயர்லாந்து அணி வெற்றி இலக்கை அடைந்து டக் வொர்த் லீவிஸ் விதிப்படி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இங்கிலாந்தின் தற்போதைய கேப்டன் இயான் மோர்கன் இப் போட்டியில் அயர்லாந்து அணி சார்பாக விளையாடினார். இந்த போட்டியில் இவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

 வார்னே அசத்தல் பவுலிங்

வார்னே அசத்தல் பவுலிங்

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 1999ம் உலக கோப்பை தொடரின் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா மோதிய இறுதிப் போட்டியில் 132 ரன்களில் பாகிஸ்தான் சுருண்டு வெளியேறியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் சுழல் மன்னன் ஷேன் வார்னே 4 விக்கெட்டுகளையும், மெக்ராத் மற்றும் டாம் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். போட்டியில் ஆஸ்திரேலியா மிகவும் சுலபமாக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 பாக். 134 ரன்கள்

பாக். 134 ரன்கள்

2003ம் ஆண்டு உலக கோப்பை தொடரின் 23வது போட்டியில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 134 ரன்களில் சுரண்டது. ஜேம்ஸ் ஆன்டர்சன் இப்போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிராய்க் வைட் 3 விக்கெட்டுகளையும், பிளிண்டாப் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். முதலில் பேட் செய்த இங்கிலாந்து 246 ரன்களை எடுத்திருந்தது. பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் 112 என்ற மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 132 ரன்களில் ஆல் அவுட்

132 ரன்களில் ஆல் அவுட்

அதே 2003ம் உலக கோப்பை தொடரில் 17வது போட்டியில் அயர்லாந்திற்கு எதிரான போட்டியிலும் ஆச்சரியமூட்டும் வகையில் பாகிஸ்தான் மோசமாக விளையாடியது. கிங்ஸ்டனில் நடந்த இந்த போட்டியில் பாகிஸ்தான் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து அணியில் பாய்ட் ரன்கின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போதா மற்றும் மெக்கல்லன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Story first published: Saturday, June 1, 2019, 13:36 [IST]
Other articles published on Jun 1, 2019
English summary
Pakistan have scored very less score in the previous world cup matches.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X