நல்லவேளை நான் கோஹ்லிக்கு பவுலிங் போடவில்லை: சொல்வது ராவல்பிண்டி எக்பிரஸ்

Posted By:

டெல்லி: பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது டிவிட் ஒன்றில் விராட் கோஹ்லி குறித்து எழுதி இருக்கிறார். அதில் விராட் கோஹ்லிக்கு தான் பவுலிங் போட மாட்டேன் என கூறியிருக்கிறார்.

மேலும் பாகிஸ்தானின் முக்கியமான பவுலர்களில் ஒருவரான முகமது இர்பான் கோஹ்லியின் செயல்பாடு குறித்து தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இர்பான் குறித்து கோஹ்லி ஒரு பேட்டியில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக கோஹ்லி குறித்து நிறைய விளையாட்டு வீரர்கள் கருத்து தெரிவிப்பது அதிகம் ஆகி வருகிறது.

 கோஹ்லியின் ரசிகர்

கோஹ்லியின் ரசிகர்

சமீப காலமாக கோஹ்லிக்கு உலகம் எங்கிலும் அதிக ரசிகர்கள் உருவாகி வருகிறார்கள். கிரிக்கெட் மட்டும் இல்லாமல் 'டபுள்யூ டபுள்யூ இ' போன்ற விளையாட்டு துறையில் இருந்தும் கூட கோஹ்லிக்கு ரசிகர்கள் தோன்ற ஆரம்பித்து இருக்கின்றனர். தற்போது இந்தியாவின் பரம வைரியான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருந்தும் கோஹ்லிக்கு ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.

 இர்பான் குறித்து கோஹ்லி

இர்பான் குறித்து கோஹ்லி

கோஹ்லி உலகின் சிறந்த பவுலர் குறித்து சில நாட்களுக்கு முன் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில் "என்னை அதிகம் மிரள வைத்த பவுலர் பாகிஸ்தானை சேர்ந்த முகமது இர்பான் தான். அவர் மிகவும் வித்தியாசமாகவும் ஆக்ரோஷமாகவும் பந்து வீசக் கூடியவர். அவருக்கு எதிராக விளையாடும் போது நீங்கள் உங்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே சமாளிக்க முடியும் இல்லையென்றால் எளிதாக அவர் பந்துகளில் அவுட் ஆகிவிடுவீர்கள்'' என்றார்.

கோஹ்லி நல்ல மனிதர்

கோஹ்லி குறித்து தற்போது இர்பான் தனது டிவிட்டில் குறிப்பிட்டு இருக்கிறார். அதில் 'கோஹ்லி மிகவும் சிறந்த மனிதர். சிறந்த வீரர். உங்களுக்காக நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். நாம் அடிக்கடி களத்தில் சந்திக்க வேண்டும்'' என்றார்.

கோஹ்லி என்னுடன் விளையாட வேண்டும்

கோஹ்லி குறித்து பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் குறிப்பிட்டு இருக்கிறார். அதில் ''நல்லவேளை கோஹ்லி விளையாடும் போது நான் பவுலிங் போடவில்லை. அவர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். அவருக்கு எதிராக பவுலிங் போடுவது மிகவும் கடினம்'' என்று குறிப்பிட்டார்.

Story first published: Sunday, November 12, 2017, 13:16 [IST]
Other articles published on Nov 12, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற