For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பச்ச குழந்தையை துரத்தி துரத்தி அடித்த இங்கிலாந்து.. அறிமுக டெஸ்டில் பாக். வீரரின் மோசமான சாதனை!

ராவல்பிண்டி: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் பாகிஸ்தான் அறிமுக வீரர் ஜாஹித் மஹ்மூத் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

ராவல்பிண்டி நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் இங்கிலாந்து வீரர்கள் முதல் நாளில் மட்டும் 506 ரன்கள் குவித்தது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியது. இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படுவது பிட்ச்சா அல்லது தார் சாலையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 இது லிஸ்ட்டிலே இல்லையே.. கோலியின் சாதனைக்கு ஆப்பு வைத்த ஜோ ரூட்.. இங்கிலாந்து, பாக் டெஸ்டில் சம்பவம் இது லிஸ்ட்டிலே இல்லையே.. கோலியின் சாதனைக்கு ஆப்பு வைத்த ஜோ ரூட்.. இங்கிலாந்து, பாக் டெஸ்டில் சம்பவம்

ரமிஸ் ராஜா விளக்கம்

ரமிஸ் ராஜா விளக்கம்

பிட்ச் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் ரமிஸ் ராஜா கூறுகையில், 5 நாட்களுக்கான பிட்ச்சை தயார் செய்வதில் பாகிஸ்தான் இன்னும் பின் தங்கியே இருக்கிறது என்று விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து இன்று இங்கிலாந்து அணி குறைந்தது 300 ரன்களை அடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் 41 ரன்களிலும், லிவிங்ஸ்டன் 9 ரன்களிலும், ஹாரி ப்ரூக்ஸ் 153 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து ஆல் அவுட்

இங்கிலாந்து ஆல் அவுட்

தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்களில் ராபின்சன் மட்டும் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இறுதியாக இங்கிலாந்து அணி 101 ஓவர்களில் 657 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. நேற்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களை, இன்று பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் விரைந்து விக்கெட் வீழ்த்தினர். இருந்தும் இங்கிலாந்து அணியின் ரன்ரேட் 6 ரன்களுக்கு மேலாகவே உள்ளது.

பாக். வீரர் ஜாஹித் மஹ்மூத்

பாக். வீரர் ஜாஹித் மஹ்மூத்

குறிப்பாக பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளரும், அறிமுக வீரருமான ஜாஹித் மஹ்மூத், மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அறிமுக டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே அதிக ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். 33 ஓவர்களை வீசிய ஜாஹித் மஹ்மூத் 235 ரன்களை கொடுத்துள்ளார். ஜாஹித் மஹ்மூத் வீசிய ஒரு ஓவரில் 27 ரன்களை இங்கிலாந்து அணி அடித்தது.

மோசமான சாதனை

மோசமான சாதனை

இங்கிலாந்து ரன்கள் ஏராளமான ரன்கள் விளாசியும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஜாஹித் மஹ்மூத்-க்கே தொடர்ந்து ஓவர் வழங்கினார். ஆனால் இறுதியாக 4 விக்கெட்டுகளை ஜாஹித் மஹ்மூத் வீழ்த்தினார். இவருக்கு முன்னதாக இலங்கை அணி சுராஜ் ரந்தீவ் அறிமுக டெஸ்டின் ஒரே இன்னிங்ஸில் 22 ரன்கள் கொடுத்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 2, 2022, 22:41 [IST]
Other articles published on Dec 2, 2022
English summary
Unforgettable debut for Pakistan spinner Zahid Mahmood who created an unwanted record to his name against England.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X