For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது பப்ளிக் இன்ட்ரஸ்ட் இல்லை.. பப்ளிசிட்டி இன்ட்ரஸ்ட்.. வழக்கு போட்டவருக்கு அபராதம் போட்ட ஹைகோர்ட்!

டெல்லி : ஐபிஎல் ஏலத்திற்கு தடை கேட்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி முடிவை எடுத்தது

இந்திய கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் இருப்பது போல ஐபிஎல் ஏலத்திற்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு.

ஆனால், ஐபிஎல் ஏலத்தின் அடிப்படை விஷயமே தவறு எனக் கூறி சுதிர் சர்மா என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

வீரர்கள் விற்பனை

வீரர்கள் விற்பனை

கிரிக்கெட் வீரர்களை ஏலம் விடுவது, மனிதர்களை விற்பது போலத் தான். அது தவறு என்பதை மையமாக அந்த வழக்கை தொடுத்து இருந்தார் சுதிர் சர்மா. மனிதர்களை விற்பது சட்டப்படி தவறு என்றால், கிரிக்கெட் வீரர்களை ஏலம் விடுவதும் தவறு என்பதே அவரது வழக்கின் சாராம்சம்.

தவறான பாதையை காட்டும்

தவறான பாதையை காட்டும்

அவரது மனுவில், ஐபிஎல் ஏலம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் நடப்பதால், அது நாட்டில் ஊழல், வாரிசு முன்னுரிமை மற்றும் மனித விற்பனை ஆகியவற்றை ஊக்கப்படுத்துகிறது என அதிரடியாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

சட்ட மீறல்

சட்ட மீறல்

மேலும், மனித விற்பனை, ஏலம் கேட்பது, ஏலம் விடுவது இவை அனைத்தும் சட்டத்தை மீறிய செயல்கள், சட்ட அமைப்பையே கேள்விக்கு உள்ளாக்கும் செயல்கள் என கூறப்பட்டு இருந்தது. இதனால், ஐபிஎல் ஏலத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டு இருந்தது.

ஹைகோர்ட் முடிவு

ஹைகோர்ட் முடிவு

ஆனால், டெல்லி உயர்நீதிமன்றம் இந்த மனுவை நிரகாரித்து அதிரடி முடிவு எடுத்தது. மனுவில் கூறப்பட்டு இருக்கும் கருத்துக்கு மாறான கருத்தை கூறிய நீதிபதிகள், ஐபிஎல் அணிகளில் விளையாடுவது வீரர்களின் செல்வாக்கை அதிகரிக்கவே செய்கிறது என்று கூறி அதிரடி முடிவு எடுத்தது.

அபராதம் விதித்த கோர்ட்

அபராதம் விதித்த கோர்ட்

மேலும், இந்த வழக்கை தொடுத்த சுதிர் சர்மா, இதை "பப்ளிக் இன்ட்ரஸ்ட்"இல் செய்யவில்லை. "பப்ளிசிட்டி இன்ட்ரஸ்ட்"இல் செய்துள்ளார் என்று கூறி அவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனர். ஐபிஎல் துவங்கிய காலத்திலும் பலர் இதுபோன்ற பொது நல வழக்குகள் தொடுத்து ஐபிஎல் ஏலத்தை தடை செய்ய முயன்றனர். எனினும், எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, July 28, 2019, 8:21 [IST]
Other articles published on Jul 28, 2019
English summary
Petitioner fined Rs.25,000 by Delhi High court for asking IPL auction ban
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X