For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி Vs பாகிஸ்தான் - 0 டெஸ்ட்.. அரசியல் காரணங்களால் அழியும் கிரிக்கெட்..ஒரு தலைமுறையே போச்சு

லண்டன் : இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் போட்டியில் மோதினாலே உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காண்பார்கள்.

ஆனால், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடரை தவிர வேறு எந்த தொடரிலும் பங்கேற்பதில்லை.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இருத்தரப்பு தொடரில் கடைசியாக 2012 ஆம் ஆண்டு மோதின. அதன் பிறகு 10 ஆண்டுகளாக இரு அணிகளும் எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை.

3 அதிரடி மாற்றங்கள்.. தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20 போட்டி.. ப்ளேயிங் 11ல் ரோகித் மாஸ் முடிவு! 3 அதிரடி மாற்றங்கள்.. தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20 போட்டி.. ப்ளேயிங் 11ல் ரோகித் மாஸ் முடிவு!

பாதிக்கப்படும் விளையாட்டு

பாதிக்கப்படும் விளையாட்டு

இந்தியாவும், பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல மகாமகங்கள் ஆகிறது. அவ்வளவு ஏன் கிரிக்கெட்டில் மட்டும் இந்த நிலைமை கிடையாது. அண்மையில் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கூட பாகிஸ்தான் அணி வெளியேறியது. பாகிஸ்தான் ஹாக்கி அணியும் கூட இந்தியாவில் நடைபெற்ற தொடரில் இருந்து வெளியேறியது.

அரசியல் காரணங்கள்

அரசியல் காரணங்கள்

இந்திய அணியில் இஷாந்த் சர்மாவை தவிர வேறு எந்த வீரரும் பாகிஸ்தானுடன் டெஸ்ட் போட்டியில் விளையடவில்லை. இதே போல் பாகிஸ்தான் அணியிலும் இப்போது இருக்கும் வீரர்கள் யாரும் இந்திய அணியுடன் விளையாடியது இல்லை.அரசியல் காரணங்களால் ஒரு தலைமுறையே, ஒரு நாட்டுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

பிசிசிஐ நிராகரிப்பு

பிசிசிஐ நிராகரிப்பு

இந்த நிலையில் தான் இந்தியா, பாகிஸ்தான் போட்டியை இங்கிலாநதில் வைத்து நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முன் வந்தது. ஆனால் இந்த கோல்டன் வாய்ப்பை பிசிசிஐ நிராகரித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ, மத்திய அரசு அனுமதி தராத வரையில், பாகிஸ்தானுடன் இருத்தரப்பு போட்டிக்கு வாய்ப்பே இல்லை. என்று தெரிவித்துள்ளது.

உலககோப்பைக்கு ஆபத்து

உலககோப்பைக்கு ஆபத்து

இப்போது பெரிய பிரச்சினையே, அடுத்த ஆண்டு உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் அணியினர் இந்தியா வர மாட்டோம் என்று கூறினாலோ இல்லை, மத்திய அரசு பாகிஸ்தானுக்கு விசா கொடுக்காமல் மறுத்துவிட்டாலோ, பெரிய பிரச்சினையே ஏற்படும். இதே போன்று 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதால், அதிலிருந்து இந்தியா விலகவும் வாய்ப்பு உள்ளது.

Story first published: Wednesday, September 28, 2022, 16:51 [IST]
Other articles published on Sep 28, 2022
English summary
Politics playing spoil sports in india vs Pakistan cricket series விராட் கோலி Vs பாகிஸ்தான் - 0 டெஸ்ட்.. அரசியல் காரணங்களால் அழியும் கிரிக்கெட்..ஒரு தலைமுறையே போச்சு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X