For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலக கோப்பையை அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோடுங்க... ஐபிஎல் முதல்ல நடக்கட்டும்

வெல்லிங்டன் : இந்த ஆண்டு அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பையை அடுத்த ஆண்டு துவக்கத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று முன்னாள் நியூசிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லாம் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்சின் பயிற்சியாளராக விளங்கிவரும் மெக்கல்லம், ஐபிஎல் நடைபெறவில்லை என்றால் வீரர்கள், மற்ற ஊழியர்களுக்கு ஊதியம் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் ஐபிஎல் போட்டிகளையும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் டி20 உலக கோப்பை தொடரையும் பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடரை அதைதொடர்ந்தும் நடத்த அவர் அறிவுறுத்தியுள்ளார்.

17 சிக்ஸ்.. 66 பந்தில் 175 ரன்.. சம்பவம் செய்த யுனிவெர்சல் பாஸ்.. மிரண்டு போன கிரிக்கெட் உலகம்!17 சிக்ஸ்.. 66 பந்தில் 175 ரன்.. சம்பவம் செய்த யுனிவெர்சல் பாஸ்.. மிரண்டு போன கிரிக்கெட் உலகம்!

நடைபெறுவதில் சிக்கல்

நடைபெறுவதில் சிக்கல்

வரும் அக்டோபர் 18ம் தேதி துவங்கி நவம்பர் 15ம் தேதிவரை டி20 உலக கோப்பை தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தொடர் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வரும் செப்டம்பர் மாதம் வரையில் வெளிநாட்டினர் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டி20 உலக கோப்பை நடைபெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

முன்னாள் நியூசிலாந்து கேப்டன் அறிவுரை

முன்னாள் நியூசிலாந்து கேப்டன் அறிவுரை

இந்நிலையில் அக்டோபரில் திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடரை அடுத்த ஆண்டின் துவக்கத்தில் நடத்தலாம் என்று முன்னாள் நியூசிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதையும் தள்ளி வைக்கலாம்

அதையும் தள்ளி வைக்கலாம்

இதனிடையே அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நியூசிலாந்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலக கோப்பை தொடரை மேலும் தள்ளி வைக்கவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். ஆனால் மூன்று தொடர்களும் ஒன்றுக்கொன்று பாதிப்பை ஏற்படுத்தாதவண்ணம் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வீரர்கள், ஊழியர்கள் சம்பளம் கிடைக்கும்

வீரர்கள், ஊழியர்கள் சம்பளம் கிடைக்கும்

ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்சின் பயிற்சியாளராக விளங்கிவரும் மெக்கல்லம், ஐபிஎல் போட்டிகள் தடையின்றி நடத்தப்பட வேண்டும் என்றும், அவ்வாறு நடத்தப்பட்டால் மட்டுமே, வீரர்கள் மற்றும், அதுசார்ந்த ஊழியர்களுக்கு சம்பளம் முறையாக கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

12 நாடுகள் பங்கேற்பு

12 நாடுகள் பங்கேற்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச அளவில் டி20 உலக கோப்பை உள்ளிட்ட பல கிரிக்கெட் போட்டிகளின் நிலை கேள்விக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், இந்த தொடர்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள ஐசிசி தலைமை நிர்வாகிகள் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 12 உறுப்பு நாடுகள் பங்கேற்கின்றன.

Story first published: Thursday, April 23, 2020, 18:24 [IST]
Other articles published on Apr 23, 2020
English summary
Brendon McCullum advocated for this year's T20 World Cup to be postponed
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X