"பிரஷர் அதிகம் பாஸ்" ஐசிசி தொடர்களில் இந்தியா தோற்க இதுதான் காரணம்.. சொல்கிறார் மொயின் அலி!

அபுதாபி: சர்வதேச அளவில் ஐசிசி தொடர்களில் உள்ள அழுத்தம் மிகவும் அதிகம் என்று இந்திய அணியின் தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் மொயின் அலி தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இங்கிலாந்து அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. இதனைத் தொடர்ந்து இயன் மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அணி மீண்டும் கட்டமைக்கப்பட்டது.

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு இயன் மோர்கன் புதிய முகத்தை கொடுத்தார். இதன் பலனாக 2019ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரையும், தற்போது நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரையும் வென்று சாதித்துள்ளது.

கெளம்புங்க ஜடேஜா..! பிசிசிஐயை அன்னாந்து பார்க்க வைத்த வாசிங்டன் சுந்தர்.. அப்படி என்ன செய்தார்?கெளம்புங்க ஜடேஜா..! பிசிசிஐயை அன்னாந்து பார்க்க வைத்த வாசிங்டன் சுந்தர்.. அப்படி என்ன செய்தார்?

இயன் மோர்கன் பாணி

இயன் மோர்கன் பாணி

இயன் மோர்கன் தொடங்கி வைத்த இங்கிலாந்து அணியின் புதிய பாணியை, ஜோஸ் பட்லர் தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார். இதன்மூலம் ஒரே நேரத்தில் ஒருநாள் மற்றும் டி20 சாம்பியனாக உள்ள முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து அணி பெற்றுள்ளது. இதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியின் அதிரடி வழிமுறையை, பல்வேறு அணிகள்பின்பற்ற முயற்சித்து வருகிறது.

மொயின் அலி பேட்டி

மொயின் அலி பேட்டி

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் மொயின் அலி கூறுகையில், 90களில் ஆஸ்திரேலிய அணியின் வழிமுறையை மற்ற அணிகள் பின்பற்ற முயற்சிப்பர். தற்போது அதேபோல் இங்கிலாந்து அணியின் வழிமுறையையும், டெம்ப்ளேட்டையும் முக்கிய அணிகள் பின்பற்ற தொடங்கியுள்ளது. இங்கிலாந்து வீரர்களின் மனநிலையில் மாற்றத்தை கொண்டு வந்தது தான் இயன் மோர்கன் செய்த பெரிய மாற்றம்.

இதுதான் எங்கள் டெம்ப்ளேட்

இதுதான் எங்கள் டெம்ப்ளேட்

இதன்மூலம் வெவ்வேறு அணிகளுக்கு ஏற்ப, மைதானங்களுக்கு ஏற்ப, சூழலுக்கு ஏற்ப நாங்கள் வீரர்களை தேர்வு செய்ய முடியும். சில மாதங்களுக்கு முன் தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகளுடன் நாங்கள் அடைந்த தோல்விக்கு, எங்களுக்கு நல்ல மாற்றத்தை கொடுத்தது. இதனால் இங்கிலாந்து அணியின் வழிமுறையை மற்ற அணிகள் பின்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது.

எதிர்காலம்

எதிர்காலம்

அதேபோல் இனி கிரிக்கெட்டில் ஒரு வீரர் அனைத்து வகையான போட்டிகளிலும் பங்கேற்க முடியாது. இனி இரண்டு வகையான போட்டிகளில் மட்டுமே ஒரு வீரரால் விளையாட முடியும். அதுதான் வீரர்களுக்கும், அணிக்கும் நல்லது என்று கருதுகிறேன் என்று தெரிவித்தார் .

பிரஷர் வேறு

பிரஷர் வேறு

தொடர்ந்து இந்திய அணி ஐசிசி தொடர்களில் தோல்வியை தழுவுவது பற்றி கூறுகையில், ஐசிசி தொடர்களில் உள்ள பிரஷர் வேறு. சில நேரங்களில் இங்கிலாந்து வீரர்கள் அதிக பிரஷரில் இருந்துள்ளோம். கோப்பையை வெல்ல வேண்டும் என்று தீவிரமாக இருந்துள்ளோம். அணியாக விளையாடும் போது ஆட்டமிழக்க அச்சமடைய கூடாது. இந்தியாவுக்கு எதிராக அன்றைய நாளில் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினோம். அதேபோல் அணியாக தோல்வியடையும் போது, வீரர்களிடத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
England team's Moeen Ali has said that the pressure in the ICC series at the international level is very high about the defeat of the Indian team.
Story first published: Friday, November 25, 2022, 19:20 [IST]
Other articles published on Nov 25, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X