இதுதான் பிளேயிங் 11.. காயத்தின் காரணமாக இந்திய அணியில் ஏற்பட்ட பல மாற்றங்கள்.. கசிந்த தகவல்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆட போகும் இந்திய அணியின் விவரம் கசிந்து உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. பல வீரர்கள் காயம் அடைந்து இருந்தாலும் எப்படியாவது சிறப்பாக ஆடி வெற்றிபெற வேண்டும் என்று இந்திய அணி உறுதியாக உள்ளது.

கிரிக்கெட் அனைவருக்குமான விளையாட்டு... இதுல எங்கிருந்து இனவாதம் வந்துச்சு -நாதன் லியோன் கேள்வி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

வெற்றி

வெற்றி

இப்படிப்பட்ட நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இதில் வெற்றிபெறும் அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வெல்லும். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆட போகும் இந்திய வீரர்கள் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

ரோஹித்

ரோஹித்

இந்திய அணியில் இந்த போட்டியில் புதிய ஓப்பனிங் வீரர்கள் இறங்க உள்ளனர். மயங்க் அகர்வால், சுப்மான் கில் ஆகியோர் ஓப்பனிங் இறங்க உள்ளனர். இதில் மயங்க் அகர்வால் காயம் அடைந்த விஹாரிக்கு மாற்று வீரராக களமிறங்க உள்ளார்.

சுப்மான் கில்

சுப்மான் கில்

இன்னொரு பக்கம் சுப்மான் கில் ஒன்டவுன் இறங்குவார். அல்லது மிடில் ஆர்டரில் ரஹானேவிற்கு பின் பேட்டிங் இறங்குவார் என்று கூறப்படுகிறது. புஜாரா, ரஹானே ஆடுவது உறுதியாகி உள்ளது. பண்ட் காயம் இருந்தாலும் கண்டிப்பாக ஆடுவார்.

அஸ்வின்

அஸ்வின்

அஸ்வின் காயத்தோடு உள்ளார். இவர் ஆடுவது 70% உறுதியாகி உள்ளது. ஜடேஜாவிற்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் அணியில் இணைய உள்ளார். இன்னொரு பக்கம் பும்ராவிற்கு பதிலாக ஷரத்துல் தாக்கூர் அணியில் இணைய உள்ளார் என்று கூறுகிறார்கள்.

அணியில் இணைவார்

அணியில் இணைவார்

அதன்படி அடுத்த டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, பண்ட், சுப்மான் கில், ஷரத்துல் தாக்கூர், அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர், சைனி, சிராஜ் ஆகியோர் ஆடுவார்கள் என்று கூறப்படுகிறது. அஸ்வின் காயம் காரணமாக ஆடாமல் போனால் அவருக்கு பதிலாக நடராஜன் அணியில் இணைய வாய்ப்புள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Probable playing 11 of team India against Australia in the 4th test to be held in Brisbane.
Story first published: Wednesday, January 13, 2021, 12:09 [IST]
Other articles published on Jan 13, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X