தோனி மாதிரியே ஹர்திக் பண்றாரு.. நம்ம சேட்டன் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு ஏன் தரல ? அஸ்வின் கேள்வி

மும்பை : இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு என் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின், சஞ்சு சாம்சன் எனக்கு மிகவும் பிடித்த வீரர். அவர் விளையாடும் என்பதை பார்க்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஆனால் என்ன காரணத்திற்காகவோ சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெறவில்லை என்று அஸ்வின் வேதனை தெரிவித்துள்ளார்.

கொளுத்திப்போட்ட வசீம் ஜாஃபர்.. மோசமாக அடித்துக்கொள்ளும் பண்ட் - சஞ்சு ரசிகர்கள்.. அடப்பாவமே! கொளுத்திப்போட்ட வசீம் ஜாஃபர்.. மோசமாக அடித்துக்கொள்ளும் பண்ட் - சஞ்சு ரசிகர்கள்.. அடப்பாவமே!

கேள்வி கேட்பார்கள்

கேள்வி கேட்பார்கள்

தொடர்ந்து பேசிய அவர் சஞ்சு சாம்சன் போன்ற திறமையான வீரர் அணியில் விளையாடவில்லை என்றால் பலரும் அது குறித்து கேள்வி எழுப்ப தான் செய்வார்கள். சஞ்சு சம்சன் அணியில் இல்லை என்றால் அவர் ட்ரெண்டிங்கில் தான் எப்போதும் இருப்பார். இது குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் ஹர்திக் பாண்டியாவிடம் கேள்வி கேட்டபோது, அதனை ஹர்திக் பாண்டியா சிறப்பாக சமாளித்தார்.

நல்ல நண்பர்கள்

நல்ல நண்பர்கள்

ஹர்திக் பாண்டியாவின் இந்த நடவடிக்கை எனக்கு பிடித்திருந்தது. நிச்சயமாக தோனியிடம் தான் இந்த பழக்கத்தை ஹர்திக் பாண்டியா கற்றுக் கொண்டிருப்பார்.தோனியும், ஹர்திக் பாண்டியாவும் நல்ல நண்பர்கள். இருவரும் அதிகமாக நேரத்தை செலவிடுவார்கள். ஹர்திக் பாண்டியாவே பலமுறை கூறியிருக்கிறார். நான் தோனியிடம் பல விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று..

என்னுடைய ஆசை

என்னுடைய ஆசை

எனக்கு தெரிந்து பத்திரிகையாளர் சந்திப்பில் எப்படி பதில் சொல்லி சமாளிப்பது என்ற பழக்கத்தையும் ஹர்திக் பாண்டியா தோனியிடம் தான் கற்றுக் கொண்டிருப்பார். அணியில் அன்றைய தினத்தில் எந்த சூழல் இருக்கிறது என்ன யுக்திகள் இருக்கிறது என்பதை பார்த்து தான் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஹர்திக் பாண்டியா கூறிய பதிலும் ஏற்கும் வகையில் தான் இருந்தது.உங்கள் அனைவருக்கும் அணியில் சஞ்சு சாம்சன், விளையாட வேண்டும் என்பது போலத் தான் என்னுடைய ஆசையும்.

 அப்படிலாம் செய்ய முடியாது

அப்படிலாம் செய்ய முடியாது

மழை பெய்கிறது என்று தெரிந்தால் போட்டியை ஏன் அங்கு நடத்துகிறார்கள்? வேறு இடத்திற்கு மாற்ற வேண்டியது தானே என்று பலரும் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். அதற்கு பின்னால் நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஒரு போட்டியை நடத்துவது என்றால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.வீரர்களுக்கு தங்கும் விடுதி , போக்குவரத்து வசதி என அனைத்தையும் ஒரு மாதத்திற்கு முன்பே செய்திருக்க வேண்டும்.

இவ்வளவு விசயம் இருக்கு

இவ்வளவு விசயம் இருக்கு

மைதானத்திற்கு வாடகை கொடுக்க வேண்டும். இப்படி பல விஷயங்கள் இருக்கிறது.இதனால் நினைத்தவுடன் நாளை மழை பெய்கிறது என்பதால் இன்று போட்டியை மாற்றி விடுவோம் என்று எல்லாம் செய்ய முடியாது என்று அஸ்வின் கூறியுள்ளார் .டி20 உலக கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடரில் மழை பெருமளவில் விளையாடியது எடுத்து அஸ்வின் இந்த கருத்தை கூறியிருக்கிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
R Ashwin on Why Hardik didnot selected sanju samson in indian team தோனி மாதிரியே ஹர்திக் பண்றாரு.. நம்ம சேட்டன் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு ஏன் தரல ? அஸ்வின் கேள்வி
Story first published: Thursday, November 24, 2022, 21:28 [IST]
Other articles published on Nov 24, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X