For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ராகுல் டிவேட்டியா, வருண் சக்ரவர்த்தி அவுட்... ராகுல் சஹர் இன்... இப்படி ஒரு அதிர்ஷ்டமா?

அகமதாபாத் : ராகுல் டிவேட்டியா மற்றும் வருண் சக்ரவர்த்தி தங்களது பிட்னசை நிரூபிக்க தவறியுள்ள நிலையில் அவர்கள் டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு பதிலாக ராகுல் சஹர் டி20 தொடரில் இணைந்து விளையாடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

5 போட்டிகளை கொண்ட டி20 தொடர் நாளை மறுதினம் முதல் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

டி20 தொடர்

டி20 தொடர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை மறுதினம் முதல் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர் துவங்கவுள்ளது. கடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்ட வருண் சக்ரவர்த்தி, ராகுல் டிவேட்டியா உள்ளிட்டோருக்கு இந்த அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

பிட்னஸ் டெஸ்ட்டில் சொதப்பல்

பிட்னஸ் டெஸ்ட்டில் சொதப்பல்

இந்நிலையில் என்சிஏவில் மேற்கொள்ளப்பட்ட பிட்னஸ் டெஸ்ட்டில் வருண் சக்ரவர்த்தி மற்றும் ராகுல் டிவேட்டியா தங்களது பிட்னசை நிரூபிக்க தவறியுள்ளனர். இதையடுத்து நாளை மறுதினம் துவங்கவுள்ள இந்த டி20 தொடரில் இவர்கள் இருவரும் இடம்பெற மாட்டார்கள் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ராகுல் சஹர் இணைப்பு

ராகுல் சஹர் இணைப்பு

கடந்த ஆஸ்திரேலிய தொடரிலும் இடம்பெற்றிருந்த வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் அந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வருண் சக்ரவர்த்தி மற்றும் ராகுல் டிவேட்டியாவிற்கு பதிலாக லெக் ஸ்பின்னர் ராகுல் சஹர் அணியில் இணைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பயோ பபளில் ராகுல் சஹர்

பயோ பபளில் ராகுல் சஹர்

கடந்த டெஸ்ட் தொடரிலிருந்தே இந்திய அணியின் ஸ்டாண்ட் பை வீரராக அணியின் பயோ பபளில் ராகுல் சஹர் உள்ளதால் அவரை அணியில் எளிதில் இணைக்க முடியும். இதனிடையே ராகுல் டிவேட்டியா மற்றும் வருண் சக்ரவர்த்தி இருவரும் தொடர்ந்து என்சிஏவில் பயிற்சிகளில் ஈடுபட வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, March 10, 2021, 14:45 [IST]
Other articles published on Mar 10, 2021
English summary
Varun Chakravarthy was asked to undergo training at NCA and improve his fitness
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X