For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேஎல் ராகுலுக்கு ஸ்பெஷல் பயிற்சி..தனி கவனம் எடுத்து கொண்ட ராகுல் டிராவிட்..ராகுலுக்கு புதிய பொறுப்பு

மிர்பூர் : டி20 உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டவர்கள் கே எல் ராகுல் மற்றும் தொடக்க வீர ரோகித் சர்மா.

அந்த தொடரில் ராகுல் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக அரைசதம் அடித்தாலும் முக்கிய ஆட்டத்தில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை ராகுல் வெறுப்பேற்றினார்.

குறிப்பாக அரை இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து ரன்கள் மட்டுமே ராகுல் எடுத்தார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ராகுல் வெறும் 4 ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

இந்திய அணியில் எதற்கு ராகுல்.. கில், சாம்சனுக்கு வாய்ப்பு கொடுங்கள்.. பாக். வீரர் சொன்ன கருத்து! இந்திய அணியில் எதற்கு ராகுல்.. கில், சாம்சனுக்கு வாய்ப்பு கொடுங்கள்.. பாக். வீரர் சொன்ன கருத்து!

தொடக்கம் கிடையாது

தொடக்கம் கிடையாது

இதனால் ராகுலை இந்திய அணியில் சேர்க்க வேண்டாம் என ரசிகர்கள் போர் கொடி தூக்கிய நிலையில் தற்போது சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு ராகுல் வங்கதேச தொடருக்கு திரும்புகிறார். ஆனால் ராகுலுக்கு இம்முறை புதிய பொறுப்பு காத்திருக்கிறது. தொடக்க வீரராக ஏற்கனவே ஷிகர் தவான் அணியில் இருப்பதால் ராகுலுக்கு நடுவரிசை தான் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடுவரிசை

நடுவரிசை

ஏற்கனவே ரோகித் சர்மா, தவான், சுப்மான் கில் என மூன்று வீரர்கள் தொடக்க இடத்திற்காக அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் ராகுல் பேட்டிங் வரிசையில் நம்பர் நாலாவது இடத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒருநாள் கிரிக்கெட்டில் நான்காவது இடத்தில் களமிறங்கி ராகுல் நன்றாகவே செயல்பட்டு இருக்கிறார்.

 ராகுலின் செயல்பாடு

ராகுலின் செயல்பாடு

குறிப்பாக ஒரு நாள் கிரிக்கெட்டில் நான்காவது இடத்தில் 6 போட்டிகளில் விளையாடிய ராகுல் 209 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதமும் சராசரியாக 41 ரன்கள் ராகுல் சேர்த்திருக்கிறார். இதேபோன்று ஐந்தாவது இடத்தில் 10 போட்டிகளில் விளையாடி 453 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் சராசரி 56 ஆக இருக்கிறது. இதிலும் ராகுல் ஒரு சதம் அடித்திருக்கிறார்.தொடக்க இடத்தில் ராகுலுக்கு தற்போது இடம் இல்லை என்பதால் நடு வரிசையில் தான் உலகக்கோப்பை போட்டிக்கு ராகுலை இந்திய அணி தயார் படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெஷல் பயிற்சி

ஸ்பெஷல் பயிற்சி

இந்த நிலையில் வங்கதேசத்தில் இதுவரை ராகுல் ஒரு சர்வதேச ஒரு நாள் போட்டியில் கூட விளையாடியது இல்லை. அந்த அணிக்கு எதிராக இதுவரை ராகுல் ஒரு ஆட்டத்தில் மட்டுமே பங்கேற்று 77 ரன்கள் சேர்த்திருக்கிறார். இந்த தொடர் அனைத்து வீரர்களை விட ராகுலுக்கு தான் மிகவும் முக்கியம் என்பதால் ராகுல் டிராவிட் அவருக்கு தனி கவனம் எடுத்துக்கொண்டு பயிற்சியை கொடுத்தார். வங்கதேச ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் பந்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் எப்படி ரண்களை சேர்க்க வேண்டும் போன்ற யுக்திகளை ராகுல் டிராவிட் கே எல் ராகுலுக்கு வழங்கினார் .இந்திய வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் நான்காம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 2, 2022, 23:37 [IST]
Other articles published on Dec 2, 2022
English summary
Rahul dravid gives special attention to KL Rahul ahead of bangladesh series கேஎல் ராகுலுக்கு ஸ்பெஷல் பயிற்சி..தனி கவனம் எடுத்து கொண்ட ராகுல் டிராவிட்..ராகுலுக்கு புதிய பொறுப்பு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X