For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுக்குத்தான் என்னை டீமில் எடுத்தது.. கேள்வி கேட்டவர்கள் வாயை அடைத்த இளம் வீரர்.. பரபரப்பு சம்பவம்

சென்னை: இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ராகுல் திவாதியா தற்போது விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் சிறப்பாக ஆடி வருகிறார்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி 20 தொடருக்கான இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.

6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்! 6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்!

இங்கிலாந்துக்கு எதிராக அறிவிக்கப்பட்ட டி 20 இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல், ஷிகர் தவான், சூர்யா குமார், ஹர்திக் பாண்டியா, பண்ட் , இஷான் கிஷான், சாகல், வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல், வாஷிங்க்டன் சுந்தர், ராகுல் திவாதியா, நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாகர், சைனி , ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இந்திய அணியில் ராகுல் திவாதியா எடுக்கப்பட்டது பலருக்கும் ஆச்சர்யம் அளித்தது. இவரை எல்லாம் அணியில் எடுத்தது ஏன்? ஐபிஎல் ஆடினால் அவர் பெரிய வீரரா என்று பலரும் இவருக்கு எதிராக கேள்வி எழுப்பி இருந்தனர்.

விமர்சனம்

விமர்சனம்

இவரின் அணி தேர்வை விமர்சனம் செய்து இருந்தனர். பஞ்சாப் அணிக்கு எதிராக ஐபிஎல் போட்டியில் இவர் அதிரடியாக ஆடினார். தோனி ஸ்டைலில் முதலில் மெதுவாக ஆடிவிட்டு பின் அதிரடியாக ஆடி பஞ்சாப் அணியை வெற்றிபெற வைத்தார். இதுதான் இவர் பிரபலமாக காரணம்.

பதிலடி

பதிலடி

ஆனால் இதை பார்த்து எல்லாம் இவருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்று கேள்வியும் எழுப்பப்பட்டது. இந்த நிலையில் தனக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு தற்போது திவாதியா பதிலடி கொடுத்துள்ளார். ஹரியானா அணிக்காக விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் ஆடி வரும் திவாதியா அதிரடியாக ஆடி 39 பந்தில் 73 ரன்கள் எடுத்துள்ளார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இதில் 6 சிக்ஸ், 4 பவுண்டரி அடித்துள்ளார். தான் ஒரு டி 20 வீரர் என்பதை தனது அதிரடி மூலம் ராகுல் திவாதியா நிரூபித்து இருக்கிறார். நான் இன்னும் பார்மில் இருக்கிறேன். ஒரு போட்டியில் மட்டும் நான் நன்றாக ஆடவில்லை.

வாய்ப்பு

வாய்ப்பு

நான் தொடர்ந்து நன்றாக ஆடுகிறேன் என்று திவாதியா நிரூபித்துள்ளார். இவர் நல்ல ஸ்பின் பவுலரும் கூட. இதனால் இந்திய அணியில் இவரின் ஆல் ரவுண்டர் திறமைக்காக வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள்.

Story first published: Sunday, February 21, 2021, 16:43 [IST]
Other articles published on Feb 21, 2021
English summary
Rahul Tewatia played a crucial inning for Haryana after getting call from Team India T20 squad.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X