ஒருநாள் போட்டிக்கும் வந்துவிட்டார் சின்ன தல.. ரெய்னாவிற்கு அடித்த ஜாக்பாட்.. காரணம் என்ன!

Posted By:
மீண்டும் களத்துக்கு வந்துவிட்ட சின்ன தல ரெய்னா- வீடியோ

கேப்டவுன்: ஜன்னியில் கிடந்தவனுக்கு ஜமுக்காளம் கிடைத்தது போல என்று சந்தானம் சொல்லுவார், அப்படித்தான் தற்போது ரெய்னாவிற்கு லக் அடித்து இருக்கிறது. அவர் இந்திய ஒருநாள் அணிக்கும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்தியா தென்னாபிரிக்க மோதும் இந்த மூன்றாவது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடக்கிறது. இதில் விளையாட அவர் தேர்வாகி உள்ளார். இவர் அணியில் எடுக்கப்பட்டதற்கு பின் முக்கிய காரணம் இருக்கிறது.

ஏற்கனவே அணியில் சில சீனியர் வீரர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். ரெய்னா டி-20 அணியில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டி-20 ஏற்கனவே

ரெய்னா டி -20 அணியில் இடம்பெற்று இருக்கிறார். சில நாட்களுக்கு முன் இந்த அணியின் விவரம் வெளியிடப்பட்டது. இதில் கோஹ்லி, ரோஹித், ஷிகர் , லோகேஷ் ராகுல், ரெய்னா, டோணி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, மனிஷ் பாண்டே, அக்சர் பட்டேல், சாஹல், குல்தீப், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஜெயதேவ் உனட்கட், ஷர்த்துல் தாக்குர் ஆகியோர் உள்ளனர்.

வெற்றி

வெற்றி

ரெய்னா மூன்று முறை யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்தார். சில வாரம் முன்பு இவர் யோ யோ டெஸ்டில் வெற்றி பெற்று பார்மிற்கு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. ரெய்னா இதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டார்.

ஒருநாள் அணியிலும் இருப்பார்

ஒருநாள் அணியிலும் இருப்பார்

தற்போது இவர் இந்திய ஒருநாள் அணிக்கும் தேர்வாகி இருக்கிறார். தென்னாப்பிரிக்கவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு தேர்வாகி இருக்கிறார். இந்த போட்டி கேப்டவுனில் வரும் புதன் கிழமை நடக்க உள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

15 பேர் கொண்ட அணியில் இருந்து மனிஷ் பாண்டே விலகி இருக்கிறார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அணியில் இருந்து விலகி இருக்கிறார். இதன் காரணமாக ரெய்னா சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனாலும் சந்தேகம்

ஆனாலும் சந்தேகம்

ஆனாலும் ரெய்னா போட்டியில் விளையாடுவது சந்தேகம்தான். மனிஷ் பாண்டே முதல் இரண்டு ஒருநாள் போட்டியிலும் களம் இறக்கப்படவில்லை. இதனால் ரெய்னா 15 பேர் அணியில் இடம்பிடித்தாலும் விளையாடும் அணியில் இருப்பது சந்தேகம் தான்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Raina will play in 3rd ODI against South Africa in Cape Town. Manish Pandey has retired from the series due to his injury. Rain already selected to play for T-20 series against SA.
Story first published: Tuesday, February 6, 2018, 11:44 [IST]
Other articles published on Feb 6, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற