
விராட் கோலி ஃபார்ம்
சுமார் 2 வருடங்களுக்கும் மேலாக சதமடிக்காமல் உள்ள விராட் கோலி, அரைசதத்தையாவது தொடர்ந்து அடிக்க வேண்டும் என்ற அளவிற்கு ரசிகர்கள் ஏக்கமடைந்துள்ளனர். இந்நிலையில் கோலியின் மோசமான ஃபார்முக்கு முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான் காரணம் என ரஷித் லதிஃப் கூறியுள்ளார்.

கும்ப்ளேவின் கருத்து
இதுகுறித்து பேசிய அவர், 2019ம் ஆண்டு கும்ப்ளே போன்ற ஒருவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ரவி சாஸ்திரியை உள்ளே கொண்டு வந்தீர்கள். ரவி சாஸ்திரி ஒரு வர்ணனையாளர் தான். அவருக்கும் பயிற்சியாளர் பணிக்கும் சம்பந்தமே கிடையாது. அதுதான் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக சென்றது.

அவர் மட்டுமே காரணம்
பயிற்சியாளர் தகுதியே இல்லாத ரவிசாஸ்திரியிடம் பணியாற்றியதால் தான் விராட் கோலி மோசமாக ஃபார்ம் அவுட்டாகியிருப்பதற்கு காரணம். இல்லையென்றால் இப்படி நடந்திருக்கவே இருக்காது என ரஷித் லதிஃப் கூறியுள்ளார். ஆனால் இதனை ரசிகர்கள் யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை.

ரவி சாஸ்திரியின் ரெக்கார்ட்
இந்திய கிர்க்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக ரவி சாஸ்திரியாக விளங்கினார். ஆஸ்திரேலிய மண்ணில் 2 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியது. இங்கிலாந்து மண்ணில் 2 -1 என அசத்தியது. 2017ல் சாம்பியன்ஸ் டிராபி இறுதிச்சுற்று, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 2019 உலகக்கோப்பை அரையிறுதி என அசத்தியிருக்கிறார்.