For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிறந்த அணின்னு நீங்களே சொல்லக்கூடாது.. மக்கள் சொல்லட்டும்.. ரவி சாஸ்திரிக்கு நோஸ்கட்

மும்பை : ரவி சாஸ்திரி பிசிசிஐ கூட்டத்தில் தற்பெருமை அடித்து வாங்கிக் கட்டிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியா மண்ணைக் கவ்வியது. 4-1 என ஐந்து போட்டிகள் டெஸ்ட் தொடரில் மோசமான தோல்வியை தழுவியது.

அப்படி ஒரு தோல்வி பெற்ற பின்னும், ரவி சாஸ்திரி அந்த இந்திய அணி தான் இதுவரை வெளிநாடுகளில் ஆடிய மற்ற இந்திய அணிகளை விட சிறந்த அணி என நகைப்புக்குரிய வகையில் கூறினார்.

அதிர்ச்சிக் கருத்து

அதிர்ச்சிக் கருத்து

முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், கங்குலி தொடங்கி கிரிக்கெட் ரசிகர்கள் வரை ரவி சாஸ்திரியை விட்டு விளாசினார்கள். அடுத்து கேப்டன் கோலியும் ரவி சாஸ்திரியின் கருத்தை ஆமோதித்த போது பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

சிரமமான சூழ்நிலை

சிரமமான சூழ்நிலை

இந்த சம்பவங்கள் நடந்து முடிந்த பின்னர், இந்தியா தனக்கு சாதகமான இந்திய துணைக் கண்ட சூழ்நிலைகளில் ஆசிய கோப்பை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர்களை வரிசையாக வென்றுள்ளது. அடுத்து ஆஸ்திரேலியா செல்ல உள்ளது. அங்கே இந்திய அணி வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்களில், சிரமமான சூழ்நிலையில் ஆட உள்ளது.

தற்பெருமை அடித்த ரவி சாஸ்திரி

தற்பெருமை அடித்த ரவி சாஸ்திரி

அதற்கான முன்னேற்பாடுகள் பற்றி பேச பிசிசிஐ கூட்டம் நடத்தப்பட்டது. அதில் கோலி, ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மா, ரஹானே உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். பிசிசிஐ முக்கிய அதிகாரிகளும் இருந்தனர். அங்கே, ரவி சாஸ்திரி இந்திய அணியின் அருமை பெருமைகளை கூறி, இப்போதுள்ள இந்திய அணிதான் சிறந்த அணி என தற்பெருமை அடித்துள்ளார்.

மக்கள் முடிவு செய்யட்டும்

மக்கள் முடிவு செய்யட்டும்

அதைக் கேட்டு கடுப்பான நிர்வாக கமிட்டியினர் "இந்த கூட்டம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் பற்றி பேசத் தான் கூடியுள்ளது. அதைப் பற்றி பேசுவோம். இந்த அணி தான் வெளிநாடுகளில் சிறந்த இந்திய அணி என நீங்கள் எந்த முடிவும் செய்ய வேண்டாம். மக்கள் அதை சொல்லட்டும்" என மூக்கறுப்பது போல பேசியுள்ளனர்.

உங்களுக்கு எல்லாம் கொடுத்தாச்சு

உங்களுக்கு எல்லாம் கொடுத்தாச்சு

மேலும், இந்த கூட்டத்தில் ரவி சாஸ்திரி மற்றும் கோலியிடம், "உங்களுக்கு எல்லாமே கொடுத்தாகி விட்டது. மிக அதிக மதிப்பிற்கு ஒப்பந்தம், பயிற்சி வசதிகள், உதவியாளர்கள், நீங்கள் என்னவெல்லாம் கேட்டீர்களோ அது எல்லாம் கொடுத்தாகி விட்டது. உங்களுடைய செயல்பாடுகளை நீங்கள் காட்ட வேண்டியது தான் பாக்கி. பிசிசிஐ நீங்கள் வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என கேட்பதில் எந்த தவறும் இல்லை" என பிசிசிஐ அதிகாரிகள் கூறி இருக்கின்றனர்.

Story first published: Friday, November 9, 2018, 12:45 [IST]
Other articles published on Nov 9, 2018
English summary
Ravi Sasthri once again praises Indian test team but COA said People will decide it
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X