For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வினுக்கு இனி வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான்.. சோலியை முடிக்கப் போகும் ரவி சாஸ்திரி!

Recommended Video

Ravichandran Aswin | டெஸ்ட் தொடரில் இருந்து அஸ்வின் அதிரடி நீக்கம் குறித்து ரவி சாஸ்திரி -வீடியோ

மும்பை : ரவி சாஸ்திரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஸ்வின் நீக்கம் பற்றி பேசியதை வைத்துப் பார்த்தால் அவருக்கு இனியும் அணியில் வாய்ப்பு கிடைக்காது என்று தான் தோன்றுகிறது.

இந்திய டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பெற்று வந்த அஸ்வின், இந்த ஆண்டில் நடைபெற்ற எந்த டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. உத்தேச டெஸ்ட் அணியில் இடம் பெற்றாலும், போட்டிகளில் ஆடவில்லை.

இதுதான் சரி

இதுதான் சரி

அது குறித்து கேட்ட போது ரவி சாஸ்திரி, தாங்கள் செய்தது தான் சரி என்பது போல சுட்டிக் காட்டி பேசினார். அவர் கூறுவதைப் பார்த்தால், அஸ்வினுக்கு இனியும் அணியில் ஆட வாய்ப்பு கிடைக்காது என்பது போல் தான் உள்ளது.

அஸ்வின் காயம்

அஸ்வின் காயம்

இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாடெஸ்ட் தொடர்களின் இடையே காயம் அடைந்தார். அதை அடுத்து அவரால் சில போட்டிகளில் ஆட முடியவில்லை.

ஜடேஜா, குல்தீப் வாய்ப்பு

ஜடேஜா, குல்தீப் வாய்ப்பு

அந்த நேரத்தில் அணியில் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் வாய்ப்பு பெற்றார்கள். இருவருமே தங்களை நிரூபித்தார்கள். அதனால், அஸ்வினுக்கு போட்டி ஏற்பட்டது. எனினும், அவர்கள் இருவரையும் விட அஸ்வின் அதிக அனுபவம் மற்றும் விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விக்கெட் வேட்டை நடத்தி சாதனை புரிந்துள்ள அஸ்வினுக்கு, அந்த நாட்டுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

விமர்சகர்கள் கேள்வி

விமர்சகர்கள் கேள்வி

அஸ்வினை ஏன் அணியில் சேர்க்கவில்லை என பலரும் கேள்வி எழுப்பினர். முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரும் கேள்வி எழுப்பினர். எனினும் ஜடேஜா மட்டுமே அந்த தொடரில் சுழற் பந்துவீச்சாளராக செயல்பட்டார்.

அதெல்லாம் திட்டம்

அதெல்லாம் திட்டம்

இது குறித்து ரவி சாஸ்திரியிடம் கேட்ட போது, அதெல்லாம் அணியின் திட்டங்கள். அதை உங்களிடம் பேச முடியாது. வெஸ்ட் இண்டீஸ்-இல் என்ன நடந்தது என பார்த்தீர்கள் இல்லையா? இப்போது நீங்கள் அதன் முடிவுகளையும் பார்ப்பீர்கள்.

உலகத்தரமான ஸ்பின்னர்கள்

உலகத்தரமான ஸ்பின்னர்கள்

மேலும், அஸ்வின் உலகத்தரமான ஸ்பின்னர், ஜடேஜா உலகத்தரமான ஸ்பின்னர், குல்தீப் யாதவ் விரைவில் உலகத்தரமான ஸ்பின்னராக மாறுவார், இப்போது இளமையுடன் இருக்கிறார் என்று கூறி, அஸ்வினுக்கு, மற்றவர்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை சுட்டிக் காட்டினார்.

நேரடி தேர்வு

நேரடி தேர்வு

மேலும், சில சமயம் கிரிக்கெட்டில் எல்லாமே நேரடியான தேர்வாக இருக்காது. அப்போது உங்களுக்கு வேறு ஒரு உந்துதல் வேண்டும் என்றார். அதாவது அஸ்வின் தன் திறமையை நிரூபிக்க வேண்டும் அல்லது அவரை அணியில் சேர்க்கும் அளவுக்கு சூழ்நிலைகள் அமைய வேண்டும் என்று அதிரடியாக கூறி இருக்கிறார்.

Story first published: Friday, September 27, 2019, 10:12 [IST]
Other articles published on Sep 27, 2019
English summary
Ravi Shastri feels leaving Ashwin out of playing XI is a right decision. Ashwin was dropped out of the playing XI during West Indies test series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X