ரவி சாஸ்திரி ஹீரோயின்.. கோலி தான் ஹீரோ.. டைட்டானிக் போஸ்.. மரண கலாய் கலாய்த்த ரசிகர்கள்!

புனே : ரவி சாஸ்திரி குறித்த புகைப்படம் ஒன்றை கடுமையாக கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இடையே கையை விரித்து போஸ் கொடுத்துள்ளார்.

அதை எடுத்து, இதற்கு நச்சென பெயர் கொடுங்கள் என கேட்டுள்ளது ஐசிசி. அதை வைத்து தான் ரசிகர்கள் விளையாடி இருக்கிறார்கள்.

ரசிகர்கள் விரும்பவில்லை

ரசிகர்கள் விரும்பவில்லை

ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பதை ரசிகர்கள் பலரும் விரும்பவில்லை. அதற்கு காரணம், அவர்களை பொறுத்தவரை அவர் எந்த விதமான பயிற்சியும் அளிக்கவில்லை. கேப்டன் கோலியின் சொல்படி நடக்கிறார் என்பதே.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

மேலும், அணியில் நடக்கும் மாற்றங்கள், தோல்விகளுக்கு அவர் தான் காரணம் என பல முறை ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் கூட ரவி சாஸ்திரி - கோலியின் முடிவுகளை விமர்சித்து வந்துள்ளனர்.

வாழ்க்கை முறை

வாழ்க்கை முறை

இவை எல்லாம் கிரிக்கெட் சார்ந்தவை. ஆனால், கிரிக்கெட்டை தாண்டி ரவி சாஸ்திரி ஒரு விஷயத்தில் ரசிகர்களிடம் சிக்கி இருக்கிறார். அது தான் அவரது வாழ்க்கை முறை. ரவி சாஸ்திரி மது அருந்துவார்.

பாட்டிலும், கையுமாக ரவி சாஸ்திரி

பாட்டிலும், கையுமாக ரவி சாஸ்திரி

பல முறை வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின் போது அணியுடன் பயணம் செய்யும் போதும், வெற்றிக் கொண்டாட்டத்திலும், சில சமயம் உடை மாற்றும் அறையிலும் பாட்டிலும், கையுமாக புகைப்படங்களில் சிக்கி இருக்கிறார் ரவி சாஸ்திரி.

கேலி

கேலி

அப்போது முதல் ரவி சாஸ்திரி என்றாலே "பாட்டில்" என்ற முடிவுக்கு வந்த சில ரசிகர்கள், இணையத்தில் அவரை கடுமையாக கேலி செய்து வருகின்றனர். இந்த முறையும் அதே தான் நடந்துள்ளது.

கையை விரித்து..

கையை விரித்து..

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இடையே கையை விரித்து போஸ் கொடுத்துள்ளார் ரவி சாஸ்திரி. அதை எடுத்து ட்விட்டரில் பகிர்ந்த ஐசிசி, இதற்கு நச்சென தலைப்பு கொடுங்கள் என கேட்டுள்ளது.

பாட்டில், சிக்கன்

ஆனால், ரசிகர்கள் தலைப்புக்கு பதிலாக புகைப்படத்தை மாற்றி, ரவி சாஸ்திரி கையில் பாட்டிலை கொடுத்துள்ளனர். அந்த கையில் பாட்டில், இந்த கையில் சிக்கன் என ஒருவர் போட்டுள்ள மீம் தெறிக்கவிட்டுள்ளது.

டைட்டானிக் கதாநாயகி

சிலர் ரவி சாஸ்திரி கொடுத்த போஸ் டைட்டானிக் படத்தில் வரும் கதாநாயகி கொடுத்த போஸ் போல உள்ளது என கேலி செய்துள்ளனர்.

ஹீரோ, ஹீரோயின் மீம்

ஒருவர் கோலியை டைட்டானிக் கதாநாயகனாகவும், ரவி சாஸ்திரியை கதாநாயகியாகவும் மாற்றி மீம் போட்டு காமெடி செய்துள்ளார்,

சோளக்கொள்ளை பொம்மை

ஒருவர் இது சோளக்கொள்ளை பொம்மை போல இருக்கே என சரியாக கண்டு பிடித்து ஒப்பிட்டுக் காட்டி இருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை.. அதான் இப்படி!

இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை.. அதான் இப்படி போஸ் கொடுக்கிறார் என கையில் கோப்பையை கொடுத்து கலாய்த்து இருக்கிறார் ஒருவர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ravi Shastri poses with hands stretched and fans put bottle and chicken in his hands. It all started when ICC asks for caption to Ravi Shastri pose.
Story first published: Sunday, October 13, 2019, 13:59 [IST]
Other articles published on Oct 13, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X