For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஷூ லேஸ் கட்டத் தெரியாதவங்க எல்லாம் பேசுறாங்க.. தோனிக்கு அவமரியாதை.. பொங்கி எழுந்த கோச்!

மும்பை : தோனியின் ஓய்வு குறித்த பேச்சுக்கள் தினமும் அதிகரித்து வரும் நிலையில், இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அது பற்றி பேசுபவர்களை விளாசித் தள்ளி இருக்கிறார்.

தோனி ஓய்வு பற்றி பேசுபவர்களில் பாதி பேருக்கு ஷூ லேஸ் கூட சரியாக கட்டத் தெரியாது என கடும் வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்து இருக்கிறார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

தப்பு பண்ணிட்டீங்களே.. மறைக்க வேண்டியதை மறைக்காமல் வசமாக மாட்டிக் கொண்ட அஸ்வின்!தப்பு பண்ணிட்டீங்களே.. மறைக்க வேண்டியதை மறைக்காமல் வசமாக மாட்டிக் கொண்ட அஸ்வின்!

தோனி ஓய்வு முடிவு

தோனி ஓய்வு முடிவு

2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் தோனி இந்திய அணியில் ஆடவில்லை. அவர் உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற இருக்கிறார் என்ற பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிடவில்லை.

நீண்ட விடுப்பு

நீண்ட விடுப்பு

அவர் நீண்ட விடுப்பில் இருப்பதாக பிசிசிஐ வட்டாரம் அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியிட்டது. உண்மையாகவே தோனி விடுப்பு எடுத்துக் கொண்டாரா? என்பது மர்மமாகவே உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தென்னாப்பிரிக்கா டி20 தொடர்களில் தோனி பங்கேற்கவில்லை.

அணியில் தேர்வு இல்லை

அணியில் தேர்வு இல்லை

இதற்கிடையே இந்திய அணியில் அவரை தேர்வு செய்ய விருப்பம் உள்ளதா? என்ற சந்தேகமும் நிலவி வந்தது. வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி தேர்வு முடிவில் தேர்வுக் குழு தலைவர் பிரசாத், நாங்கள் தோனியை தாண்டி சென்று கொண்டு இருக்கிறோம் என்றார்.

ரவி சாஸ்திரி விளாசல்

ரவி சாஸ்திரி விளாசல்

தோனி பற்றி பலரும் பலவிதமாக பேசுவது பற்றி ரவி சாஸ்திரியிடம் கேட்ட போது பொங்கி எழுந்துள்ளார். இந்த பேட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் வெளியாகி உள்ளது.

ஷூ லேஸ் விமர்சனம்

ஷூ லேஸ் விமர்சனம்

"தோனி பற்றி கருத்து சொல்லும் பாதி பேருக்கு தங்கள் ஷூ லேஸ் கூட கட்டத் தெரியாது. அவர் இந்த நாட்டுக்காக என்ன செய்துள்ளார் என்பதை பாருங்கள்" என்று கடுமையாக விமர்சித்தார் ரவி சாஸ்திரி.

என்ன அவசரம்?

என்ன அவசரம்?

மேலும், "அவர் போக வேண்டும் என்பதை ஏன் மக்கள் இவ்வளவு ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள்? ஒருவேளை அவர்களுக்கு பேச வேறு எந்த விஷயமும் இல்லாமல் இருக்கலாம். அவருக்கும், அவரை பற்றி தெரிந்தவர்களுக்கும், அவர் விரைவில் சென்று விடுவார் என தெரியும்" என்றார்.

இது அவமரியாதை

இது அவமரியாதை

"அதனால், அது எப்போது நடக்கிறதோ அப்போது நடக்கட்டும் என விட்டு விட வேண்டும். அவருக்காக பேசுவது அவமரியாதையான செயல். 15 ஆண்டுகளாக இந்தியாவுக்காக ஆடி இருக்கிறார். அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாதா?" என்று கேள்வி எழுப்பினார் ரவி சாஸ்திரி.

டெஸ்ட் ஓய்வு

டெஸ்ட் ஓய்வு

"அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் போது என்ன சொன்னார்? விரிதிமான் சாஹாவிடம் கிளவுஸை கொடுக்கும் அளவுக்கு அவர் நல்ல விக்கெட் கீப்பர் என்றார். அவர் சொன்னது சரி. அவர் அப்போதும் நிழல் போல அணிக்காக செயல்படுகிறார்" என்றார்.

அவருக்கு தெரியும்

அவருக்கு தெரியும்

"நான் இதை சொல்கிறேன் - தோனி எப்போது ஓய்வு பெற வேண்டும் என்ற உரிமையை பெற்றுள்ளார். இந்த விவாதத்தை இத்துடன் மொத்தமாக முடித்துக் கொள்வோம்" என்றார் ரவி சாஸ்திரி.

அதை பற்றி பேசவில்லை

அதை பற்றி பேசவில்லை

ரவி சாஸ்திரி தோனி ஓய்வு பெற வேண்டும் என்பவர்களை குறித்து எகிறி இருந்தாலும், பலரும் தோனிக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படுமா? என்பது பற்றி தான் விவாதித்து வருகிறார்கள். அது பற்றி அவர் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, October 26, 2019, 13:52 [IST]
Other articles published on Oct 26, 2019
English summary
Ravi Shastri slams people commenting on Dhoni retirement. He says Half the guys commenting on MS Dhoni can’t even tie their shoe laces.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X