
அரையிறுதிப்போட்டி
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் பி பிரிவின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் மோதும் போட்டி வரும் நவம்பர் 10ம் தேதியன்று அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனால் இந்தியா அரையிறுதிக்கு என்னென்ன மாற்றங்களை செய்யும் என்ற பேச்சுக்கள் தொடங்கியுள்ளது.

சிறப்பான கம்பேக்
இந்நிலையில் தான் இந்திய ரசிகர்கள் திடீரென சுனில் கவாஸ்கரை விமர்சித்து வருகின்றனர். அதாவது டி20 உலக்கோப்பை தொடங்கியது முதலே இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினுக்கு பதிலாக யுவேந்திர சாஹல் தான் ஆட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. ரன்களை கட்டுப்படுத்துபவரை விட, விக்கெட் எடுப்பவர் தான் தேவை என விமர்சனங்கள் குவிந்தன.

அஸ்வின் தந்த பதிலடி
ஆனால் தன்மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் அஸ்வின் தரமான பதிலடி கொடுத்துள்ளார். ஜிம்பாப்வே போட்டியில் முதல் 2 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. ஆனால் அடுத்த 2 ஓவர்களில் வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். இதன் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்களை எடுத்த பவுலர் ஆக உள்ளார்.

கவாஸ்கரின் சாடல்
இதனால் மகிழ்ச்சியில் உள்ள ரசிகர்கள், சாஹல் வேண்டும் என்று கூறியவர்களை கிண்டலடித்து வருகின்றனர். இதில் முக்கியமானவர் சுனில் கவாஸ்கர். இதுகுறித்து பேசியிருந்த அவர்," அணிக்கு 8வது பேட்ஸ்மேன் எதற்காக வேண்டும், அஸ்வினை வைத்திருக்கும் வரையில் சரி வராது, அவரை உட்காரவைத்துவிட்டு, விக்கெட் எடுக்கும் சாஹலை சேர்க்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.