“அந்த கிரிக்கெட்டே அழிந்துவிடும்”.. டிராவிட்டிடம் கேட்கப்பட்ட சர்ச்சை கேள்வி.. அஸ்வின் தரமான பதிலடி!

சென்னை: இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீது தொடர்ந்து எழுந்து வந்த விமர்சனங்களுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்து 2 வாரங்களுக்கு மேல் ஆன போதும் அதன் மீதான அதிருப்தி மட்டும் இன்னும் ரசிகர்களிடம் இருந்து நீங்காமல் உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி எப்படி ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் மோசமாக தோற்றது, அதற்கு அப்படி என்னதான் காரணம் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டே வருகின்றனர்.

இந்திய அணியில் எதற்கு ராகுல்.. கில், சாம்சனுக்கு வாய்ப்பு கொடுங்கள்.. பாக். வீரர் சொன்ன கருத்து! இந்திய அணியில் எதற்கு ராகுல்.. கில், சாம்சனுக்கு வாய்ப்பு கொடுங்கள்.. பாக். வீரர் சொன்ன கருத்து!

சர்ச்சையான கேள்வி

சர்ச்சையான கேள்வி

இதுகுறித்த கேள்வியில் தான் ராகுல் டிராவிட் சர்ச்சையில் சிக்கினார். அதாவது அயல்நாட்டு தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்றால், உலகக்கோப்பை போன்ற பெரும் தொடர்களில் களத்தை புரிந்து ஆடலாமே என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல் டிராவிட் இந்திய வீரர்கள் அதில் பங்கேற்றால் சிறப்பாக தான் இருக்கும். ஆனால் அவர்கள் பங்கேற்க முடியாது. அதில் சில சிக்கல்கள் உள்ளன எனக் கூறினார்.

டிராவிட் பதில்

டிராவிட் பதில்

பிக் பேஷ் போன்ற தொடர்களின் போது தான் இந்தியாவில் மிக முக்கியமான உள்நாட்டு தொடர்களான ரஞ்சிக்கோப்பை, சையது முஷ்டக் அலி கோப்பை போன்றவைகளும் நடக்கின்றன. ஒருவேளை இந்தியர்கள் அதில் பங்கேற்றால், முதல் தர கிரிக்கெட் என்பதே இல்லாமல் அழிந்துவிடும். முதலில் இந்தியாவின் கட்டமைப்புகள் தான் முக்கியம் எனக் கூறியிருந்தார். இப்படியே கூறிக்கொண்டு அயல்நாடுகளில் தோற்றுவிடுங்கள் என ரசிகர்கள் கடும் விமர்சனங்களை கூறி வந்தனர்.

அஸ்வினின் பதிலடி

அஸ்வினின் பதிலடி

இந்நிலையில் இதுகுறித்து அஸ்வின் பேசியுள்ளார். அதில், ஒரு தோல்வியை சந்தித்த உடனேயே இதுபோன்ற கேள்விகளை கேட்பதே தவறு. அதுவும் பயிற்சியாளரிடம் இதை கேட்டது நியாயமே கிடையாது. அவர் அதற்கெல்லாம் என்ன பதில் தான் கூற வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். அவர் கூறிய பதிலே சரியானது என நான் நினைக்கிறேன். அயல்நாட்டு தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க சென்றால் நமது முதல் தர கிரிக்கெட் என்ன அவது?

தியாகம் செய்ய வேண்டுமா?

தியாகம் செய்ய வேண்டுமா?

இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட்டின் இறுதியில் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை நடக்கிறது. ரஞ்சிக்கோப்பை முடிவடைய மார்ச் மாதம் ஆகிவிடுகிறது. உடனே ஐபிஎல் தொடர் தொடங்கிவிடுகிறது. நாம் முதல் தர கிரிக்கெட்டை தவறவிட்டால், நம்மிடம் தரமான வீரர்கள் குறைந்துவிடுவார்கள். அது சிக்கலாகிவிடும். பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர்கள் இந்தியாவில் வந்து விளையாடிவிட்டு, சிறப்பான ஃபார்முடன் செல்கின்றனர். அதையெல்லாம் என்ன சொல்வீர்கள் என அஸ்வின் தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ravichandran ashwin supports Rahul dravid over Controversy of Indian players to perform in Foreign leagues
Story first published: Saturday, November 26, 2022, 12:40 [IST]
Other articles published on Nov 26, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X