For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீச்சல் குளத்தில் போடப்பட்ட சவால்.. வங்கதேசத்துடனான டெஸ்டில் வென்றது எப்படி?? அஸ்வின் சுவாரஸ்ய தகவல்

மும்பை: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் தோல்வியில் இருந்து தப்பித்ததற்கு பின்னால் நடந்த சுவாரஸ்ய கதையை ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணி சமீபத்தில் நடந்த வங்கதேசத்துடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒயிட் வாஷ் செய்து அசத்தியது. ஒருகட்டத்தில் தோற்றுவிடுமோ என்று இருந்த அணியை அஸ்வின் தான் காப்பாற்றி கரைசேர்த்தார்.

2வது இன்னிங்ஸில் 74 ரன்களுக்கெல்லாம் 7 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது, அஸ்வின் 62 பந்துகளில் 42 ரன்களை அடித்து வெற்றிக்கு வித்திட்டார். இதனையடுத்து அவருக்கு பாராட்டு குவிந்து வந்தன.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை - அஸ்வின், ஸ்ரேயாஸ் முன்னேற்றம்.. சரிந்த விராட் கோலி.. முழு விவரம் ஐசிசி டெஸ்ட் தரவரிசை - அஸ்வின், ஸ்ரேயாஸ் முன்னேற்றம்.. சரிந்த விராட் கோலி.. முழு விவரம்

சுவாரஸ்ய சம்பவம்

சுவாரஸ்ய சம்பவம்

இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின்னால் நடந்த சுவாரஸ்ய கதையை அஸ்வின் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர், " ஆட்டத்தின் 3வது நாள் முடிந்தவுடன், நான் ஹோட்டலின் நீச்சல் குளத்திற்கு நான் சென்றேன். அங்கு வங்கதேச வீரர்கள் மெஹிடி ஹாசன் மிராஸ் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் என்னிடம் ஜாலியாக கிண்டலடித்து பேசினர்.

 என்ன ஆனது

என்ன ஆனது

அவர்கள், "இந்தியாவை காப்பாற்ற இன்றே நீங்கள் வருவீர்கள் என நினைத்தோம், நாளை உங்களை மட்டும் வீழ்த்திவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என கூறினார்கள். மேலும் மிர்ப்பூரின் களத்தை பொறுத்தவரையில் இலக்கை விரட்டுவது என்பது முடியவே முடியாத காரியம். எவ்வளவு குறைந்த ஸ்கோரையும் அடிப்பது சிரமம் தான் எனக்கூறினர்.

அஸ்வின் தந்த பதில்

அஸ்வின் தந்த பதில்

அதற்கு பதிலளித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், " நானும் இதே களத்தில் தான் பந்துவீசினேன். 35வது ஓவர் வரை பொறுத்திருங்கள். அதன்பின் பந்தின் தன்மை மாறி, பேட்டிங்கிற்கு சாதகமாக மாறிவிடும். எப்படிபட்ட ஷாட்டையும் அதன்பின்னர் அடித்து வெற்றி பெறலாம் எனக்கூறியுள்ளார். அவர் கூறியபடியே அதிரடியுடன் ஆட்டத்தை முடித்தார் அஸ்வின்.

இனி வாய்ப்பு கிடையாது

இனி வாய்ப்பு கிடையாது

36 வயதாகும் அஸ்வினை இனி இந்தியாவின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரிதும் சேர்க்கமாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அஸ்வினுடன் சேர்த்து மொத்தம் 6 சீனியர் வீரர்களுக்கு இந்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் அவர் இலங்கையுடனான டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் என இரண்டிலுமே வாய்ப்பு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 29, 2022, 17:02 [IST]
Other articles published on Dec 29, 2022
English summary
Indian spinner Ravichandran ashwin shares a interesting incidents behind India's win on Mirpur test against bangladesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X