For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடப்பாவமே! எதிர்கால போட்டிகளில் இருந்து ஜடேஜா முற்றிலும் நீக்கம்.. பிசிசிஐ அதிரடி முடிவு.. என்ன ஆனது

மும்பை: இந்திய அணியின் எதிர்கால தொடர்களில் இருந்து ரவீந்திர ஜடேஜா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1 - 0 என கைப்பற்றி அசத்தியது. இதனை தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சியில் நியூசிலாந்தை துவம்சம் செய்த இளம் படை, ஒருநாள் போட்டி தொடரிலும் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஐபிஎலில் விளையாட்றாங்க, நாட்டுக்கு என்றால் நோ சொல்றாங்க.. ரோகித் சர்மாவை விமர்சித்த ஜடேஜா ஐபிஎலில் விளையாட்றாங்க, நாட்டுக்கு என்றால் நோ சொல்றாங்க.. ரோகித் சர்மாவை விமர்சித்த ஜடேஜா

வங்கதேச தொடர்

வங்கதேச தொடர்

இந்த தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன. இதற்கான அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், தற்போது பெரும் குழப்பம் உருவாகியுள்ளது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்திய அணியின் ஸ்டார் வீரராக பார்க்கப்படும் ரவீந்திர ஜடேஜா, காலில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதனால் டி20 உலகக்கோப்பையில் கூட ஆடவில்லை. அவர் இந்த வங்கதேச அணியுடனான தொடரில் தான் கம்பேக் கொடுப்பதாக அறிவிக்கப்படிருந்தது. முதன்மை ஸ்பின்னராக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

என்ன காரணம்

என்ன காரணம்

காலில் ஏற்பட்ட காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதால், இன்னும் முழு உடற்தகுதியை பெறவில்லை. அவர் பூரண குணமடைய அடுத்த வருடம் ஆகிவிடும் என்பதால் மாற்று வீரருக்கான தேடல் நடந்து வருகிறது. அதன்படி சூர்யகுமார் யாதவை மாற்று வீரராக உள்ளே கொண்டு வர பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

அறிமுகமே ஆகல

அறிமுகமே ஆகல

டி20 கிரிக்கெட்டில் கலக்கி வரும் சூர்யகுமார் யாதவ், இன்னும் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சரிவர வாய்ப்புகளை பெறவில்லை. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமே ஆகவில்லை. இதனால் அவரை இந்த 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடரில் பயன்படுத்தி பார்க்க முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே அணியில் அஸ்வின், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் உள்ளதால் மாற்று ஸ்பின்னரை சேர்க்கவில்லை.

Story first published: Wednesday, November 23, 2022, 14:26 [IST]
Other articles published on Nov 23, 2022
English summary
Star all Rounder Ravindra jadeja ruled out from India vs bangladesh series, here is the Replacement details
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X