ஐபிஎல்லில் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் முதல் வெளிநாட்டு வீரர்... ஏபி டீ வில்லியர்ஸ் சிறப்பு

டெல்லி : ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலம் வரும் மாதம் 11ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தொடரிலும் ஆர்சிபி அணி, தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஏபி டீ வில்லியர்சை தனது அணியில் தக்க வைக்க உள்ளது.

10 வீரர்கள் அவுட்.. 2 பேர் ஆடுவது டவுட்.. இந்திய அணியில் மிச்சம் இருப்பது எத்தனை பேர்..முழு விபரம்!

அவருக்கான சம்பளம் இந்த தொடரிலும் 11 கோடி ரூபாயாக இருக்கும் நிலையில், அவர் இதன்மூலம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையவுள்ள முதல் வெளிநாட்டு வீரர் என்ற சிறப்பை எட்டுவார்.

பிப்ரவரி 11ல் ஏலம்

பிப்ரவரி 11ல் ஏலம்

ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் -மே மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ளது. முறையான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாத நிலையில் வரும் மாதம் 11ம் தேதி இதற்கான ஏலம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிறிய அளவில் இந்த ஏலம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆர்சிபி வீரர் 100 கோடி ரூபாய் க்ளப்

ஆர்சிபி வீரர் 100 கோடி ரூபாய் க்ளப்

ஆர்சிபி அணி அந்த அணியின் நட்சத்திர வீரரும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனுமான ஏபி டீ வில்லியர்சை இந்த ஆண்டும் தக்க வைக்க உள்ளது. அவருக்கான சம்பளம் 11 கோடி ரூபாய். இந்நிலையில் அவர் இந்த சம்பளத்தின் மூலம் ஐபிஎல்லின் 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணையவுள்ளார்.

ஐபிஎல் சம்பளம் ரூ.91.5 கோடி

ஐபிஎல் சம்பளம் ரூ.91.5 கோடி

அவர் கடந்த 2008 ஐபிஎல் தொடர் துவங்கியதில் இருந்து ஆடிவருகிறார். கடந்த 2011 முதல் ஆர்சிபி அணிக்காக ஆடி வருகிறார். கடந்த ஆண்டு அவரது ஐபிஎல் சம்பளமும் 11 கோடி. இதுவரை ஐபிஎல்லில் அவரது சம்பளம் 91.5 கோடி ரூபாயாக உள்ளது. இந்நிலையில் வரும் 2021 தொடருக்கான 11 கோடி ரூபாய் சேர்ந்தால் அவரது சம்பளம் 102.5 கோடி ரூபாயாகும்.

100 கோடி ரூபாய் க்ளப்

100 கோடி ரூபாய் க்ளப்

முன்னதாக முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி ஆகியோர் மட்டுமே ஐபிஎல்லின் 100 கோடி ரூபாய் க்ளப்பில் உள்ளனர். இந்நிலையில இந்த க்ளப்பில் இணையவுள்ள முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை டீ வில்லியர்ஸ் தட்டி செல்லவுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
If retained, his IPL salary of 11 crores for the 2021 season will take him past the 100 crore mark
Story first published: Wednesday, January 13, 2021, 18:47 [IST]
Other articles published on Jan 13, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X