For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி - வில்லியர்ஸ் அதிரடி வீண்.. வீடு கட்டி அடித்த ரஸ்ஸல்.. கொல்கத்தா வெற்றி! - முழு ரிப்போர்ட்!

பெங்களூர் : 2019 ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒரு முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தோல்வி அடைந்துள்ளது.

இந்த சீசனில் பெங்களூர் அணி தொடர்ந்து தன் ஐந்தாவது போட்டியில் தோல்வி அடைந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் 205 ரன்கள் குவித்தும், மட்டமான பந்துவீச்சால் தோல்வி அடைந்தது பெங்களூர்.

பெங்களூர் பேட்டிங்

பெங்களூர் பேட்டிங்

முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு பார்த்திவ் பட்டேல் 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து நிதான துவக்கம் அளித்தார். பின்னர், கோலி - டி வில்லியர்ஸ் இணைந்து கொல்கத்தா பந்துவீச்சை தெறிக்கவிட்டனர்.

Virat Kohli: மரண மாஸ்..! 20 ஓவர் போட்டியில் 8,000 ரன்களை கடந்து புதிய சாதனை

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இருவரும் 2வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்தனர். கோலி 49 பந்துகளில் 84 ரன்கள், டி வில்லியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தனர். கடைசி நேரத்தில் ஸ்டாய்னிஸ் 13 பந்துகளில் 28 ரன்கள் குவிக்க, பெங்களூர் அணி 20 ஓவர்களில் 205 ரன்களை எட்டியது.

வேகப் பந்துவீச்சு சொதப்பல்

வேகப் பந்துவீச்சு சொதப்பல்

கொல்கத்தா அணியில் ஏழு பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். சுனில் நரைன், ராணா, குல்தீப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். வேகப் பந்துவீச்சாளர்கள் பிரசித் கிருஷ்ணா, பெர்குசன், ரஸ்ஸல் ரன்களை வாரி இறைத்தனர்.

நிறைய ஓட்டைகள்

நிறைய ஓட்டைகள்

கொல்கத்தா அணி இமாலய இலக்காக 206 ரன்களை எட்டுமா என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. ஆனால், பெங்களூர் அணியின் பந்துவீச்சில் நிறைய ஓட்டைகள் இருந்தன. கொல்கத்தாவின் பேட்டிங்கில் துவக்க வீரர் சுனில் நரைன் 10 ரன்களில் வெளியேறினார்.

கொல்கத்தா துவக்கம்

கொல்கத்தா துவக்கம்

அதன் பின் கிறிஸ் லின் 43, ராபின் உத்தப்பா 33 ரன்கள் எடுத்தனர். இவர்கள் ரன் ரேட் 9ஐ ஒட்டி இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். அடுத்து நிதிஷ் ராணா 23 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அதொரடி காட்டினார்.

ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடி

ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடி

இடையே தினேஷ் கார்த்திக் 15 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசியாக நின்ற ஆண்ட்ரே ரஸ்ஸல், எப்போதும் போல தன் அதிரடியைக் காட்டினார். 18வது ஓவரில் 3 சிக்ஸர்கள் அடிக்க, அந்த ஓவரில் 23 ரன்கள் கிடைத்தது.

கடைசி 2 ஓவர்கள்

கடைசி 2 ஓவர்கள்

கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் கிடைத்தால் வெற்றி என்ற நிலையில், டிம் சௌதி வீசிய 19வது ஓவரில் ரஸ்ஸல் 29 ரன்கள் சேர்த்தார். ஒரு ஹாட்ரிக் சிக்ஸ் உட்பட நான்கு சிக்ஸர்கள், ஒரு ஃபோர் அடித்தார் ரஸ்ஸல். கடைசி ஓவரின் முதல் பந்தில் ஷுப்மன் கில் ஒரு ரன் எடுக்க கொல்கத்தா அணி இமாலய இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

பந்துவீச்சு படு மட்டம்

பந்துவீச்சு படு மட்டம்

பெங்களூர் அணியின் பந்துவீச்சு படு மட்டமாக இருந்தது. அனுபவ பந்துவீச்சாளர் டிம் சௌதி 4 ஓவர்களில் 61 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். ஸ்டாய்னிஸ் ஓவருக்கு 16.80, சிராஜ் ஓவருக்கு 15.42 ரன்கள் கொடுத்தனர். சாஹல், நேகி மட்டுமே ஓவருக்கு சராசரியாக 6 ரன்கள் கொடுத்தனர்.

பந்துவீச தடை

பந்துவீச தடை

சிராஜ் 2.2 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்திருந்தார், இவர் கடைசி நேரத்தில் 2 முறை இடுப்புக்கு மேல் பந்தை ஃபுல் டாஸாக வீசி நோ பால் ஆக்கினார். இதனால், அவருக்கு பந்துவீச தடை விதிக்கப்பட்டது. 18வது ஓவரில் தடை பெற்றார் சிராஜ்.

ஏனோ தானோ பெங்களூர்!

ஏனோ தானோ பெங்களூர்!

இப்படி சுழற்பந்துவீச்சில் சிறப்பாகவும், வேகப் பந்துவீச்சில் பந்துவீச்சில் ஏனோ தானோ என செயல்பட்ட பெங்களூர் அணி 206 ரன்கள் இலக்கை கூட தற்காத்து ஆடமுடியாமல் தோல்வி அடைந்தது. தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள அந்த அணி புள்ளிப் பட்டியலில் பாதாளத்தில் இடம் பெற்றுள்ளது.

Story first published: Saturday, April 6, 2019, 0:29 [IST]
Other articles published on Apr 6, 2019
English summary
RCB vs KKR : Royal challengers Bangalore registered 5th loss in IPL 2019. Kolkata Knight Riders win by 5 wickets as Andre Russel fired 48 runs from 13 balls at the end.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X