For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“போட்டிக்கு முன் இப்படியா செய்வது” மனதளவில் காயப்பட்ட டூப்ளசிஸ்.. ஆர்சிபி குறித்து உருக்கமான பேச்சு

அகமதாபாத்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி இருக்கும் சூழலில் ஆர்சிபி வீரர்கள் சோர்வில் உள்ளதாக டூப்ளசிஸ் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 2வத் குவாலிஃபையர் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தான் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

அஸ்வின் தான் ராஜஸ்தானின் பெரும் பிரச்சினையே.. 2 முக்கிய விஷயம்.. ஆதாரத்துடன் கூறிய மஞ்ச்ரேக்கர்! அஸ்வின் தான் ராஜஸ்தானின் பெரும் பிரச்சினையே.. 2 முக்கிய விஷயம்.. ஆதாரத்துடன் கூறிய மஞ்ச்ரேக்கர்!

ஆர்சிபிக்கு கட்டாயம்

ஆர்சிபிக்கு கட்டாயம்

புள்ளிப்பட்டியலில் 3வது இடம் பிடித்த ஆர்சிபி அணி, தனது எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை போராடி வென்றது. இதே நம்பிக்கையுடன் இன்றும் வெற்றியை பெற்றால் மட்டுமே தனது முதல் கோப்பைகான கனவை எட்ட முடியும். இதனை எதிர்நோக்கி தான் ரசிகர்களும் காத்துள்ளனர். இந்நிலையில் வீரர்கள் யாருமே தூங்கவில்லை என டூப்ளசிஸ் கூறியுள்ளார்.

டூப்ளசிஸ் பேட்டி

டூப்ளசிஸ் பேட்டி

இதுகுறித்து பேசிய அவர், புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் பிடித்துவிட்டால், அதன்பின்னர் இறுதிப்போட்டிக்கு செல்வது மிகவும் கடினமான ஒன்றாகும். இது உடலுக்கும், மனதிற்கும் பெரிய பாரத்தை கொடுக்கிறது. அதுவும் இந்த ஆண்டு மிகவும் மோசமாக உள்ளது. 2 மாதமாக கிரிக்கெட் ஆடி வருகிறோம். வழக்கத்தை விட அதிக போட்டிகள் வந்துள்ளது. இதனால் மனதளவில் சற்று பாதிப்படைந்துள்ளோம்.

தூக்கமே இல்லை

தூக்கமே இல்லை

ஆர்சிபி அணியில் நாங்கள் அனைவரும் பல நாட்கள் தூங்காமல் இருந்து வருகிறோம். அதுவும் எலிமினேட்டர் போட்டியில் இருந்தே சற்று நிம்மதியில்லை. எனினும் இவற்றினை கடந்து களத்தில் வீரர்கள் பதற்றமின்றி நடந்துக்கொள்வது நிம்மதியாக உள்ளது. வெற்றி பெற்றே தீர வேண்டும் என வீரர்கள் உள்ளனர் என டூப்ளசிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அசுர பலத்தில் ஆர்சிபி

அசுர பலத்தில் ஆர்சிபி

ஆர்சிபி அணி கடந்த சில போட்டிகளாக நல்ல ஃபார்மில் இருந்து வருகிறது. விராட் கோலி, மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து தற்போது ரஜத் பட்டிதாரும் அட்டகாசமான ஃபார்மில் உள்ளார். இதே போல பவுலிங்கில் ஹாசல்வுட், ஹர்ஷல் பட்டேல், ஹசரங்கா என 3 பேரும் மிகச்சிறப்பாக உள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Story first published: Saturday, May 28, 2022, 9:08 [IST]
Other articles published on May 28, 2022
English summary
RCB vs RR IPL match : faf Duplessis shares the RCB Players mentality ahead of IPL qualifier Match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X