For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யுவி..! ஒரு உண்மையான சாம்பியன்..!! ஜெர்சி நம்பர் 12 இனி இருக்காது..!! முன்னாள் வீரர்கள் உருக்கம்

Recommended Video

YUVRAJ RETIRES | யுவராஜ் சிங் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்கள் உருக்கம்- வீடியோ

மும்பை:சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்துள்ள யுவராஜை உண்மையான சாம்பியன் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களும், சக வீரர்களும் பாராட்டி உள்ளனர்.

2011ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வெல்ல காரணமாக இருந்த அதிரடி மன்னன் யுவராஜ் சிங் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். விளையாடும் காலங்களில் தமது ஆட்டத்திறன் எப்படி இருந்தது, உதவியவர்கள் யார்? முக்கிய தருணங்களில் தமது மனநிலை எவ்வாறு இருந்தது என்று பகிர்ந்திருக்கிறார்.

உலக கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி விளையாடிக் கொண்டு இருக்கும் இந்த வேளையில் யுவி ஓய்வை அறிவித்திருக்கிறார். அதனை அறிந்த சக வீரர்கள் பலர் அவரின் சாதனைகளை புகழ்ந்து பாராட்டி உள்ளனர். கேப்டன் கோலி டுவிட்டரில் தெரிவித்து இருப்பதாவது:

பாஜியின் நினைவுகள்

கிரிக்கெட் வாழ்க்கையில் இந்திய நாட்டுக்காக ஆடி, பல சாதனைகள் புரிந்த பாஜிக்கு (யுவராஜ்) வாழ்த்துகள். நிறைய நினைவுகள், வெற்றிகளை நாட்டுக்காக தந்திருக்கிறாய். வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள்... அப்சொல்யூட் சாம்பியன் என்று கூறியிருக்கிறார்.

சகாப்தம் முடிவு

சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ள டுவிட்டர் பதிவில் கிரிக்கெட் உலகின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக மனம் உருகியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: ஒரு சகாப்தம் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. உன்னுடைய 6 சிக்சர்கள், களத்தில் ஆடும் ஆட்டம், பிடித்த கேட்சுகள் எதையும் மறுக்க முடியாது. உனது முயற்சி, தன்னம்பிக்கை அனைத்தும் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம். உமது 2வது இன்னிங்ஸ் வெற்றிக்கு வாழ்த்துகள் என்றார்.

முன்மாதிரி வீரர்

முன்மாதிரி வீரர்

யுவியிடன் விளையாடியது உண்மையில் அற்புதமான தருணங்கள் என்று முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் கூறியிருக்கிறார். அவர் தமது டுவிட்டர் பதிவில், உங்களுடன் விளையாடியது மகிழ்ச்சியான தருணம், பல கட்டங்களில் ஊக்கப்படுத்தும் நபராக, முன்மாதிரியாக இருந்துள்ளீர்கள். குட்லக் என்று கூறியிருக்கிறார்.

12ம் எண் ஜெர்சி

கவுதம் கம்பீரின் மெசேஜ் தான் அனைவரும் உற்றுப்பார்க்க வைத்திருக்கிறது. அவர் கூறியிருப்பதாவது:கங்கிராஜூலேஷன்ஸ் பிரின்ஸ்... வெள்ளை பந்தில் வெளுத்து கட்டும் இந்திய அணியின் வீரன். நீ அணியும் 12ம் எண் ஜெர்சிக்கு ஓய்வு கொடுக்கலாம். உன்னை போன்று சாம்பியன் போல நான் ஆட வேண்டும் என்று விருப்பப்பட்டது உண்டு என்று கூறியிருக்கிறார்.

இனி காண்பது சிரமம்

கம்பீரின் வாழ்த்து போலவே இருக்கிறது சேவாக்கின் வாழ்த்து செய்தி. அவர் கூறுகையில், வீரர்கள் வருவார்கள், போவார்கள், ஆனால் உங்களை போன்ற ஒரு வீரரை இனம் காண்பது சிரமம். பல கஷ்டமான தருணங்களை கடந்துள்ளீர்கள், விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றால் மக்களிடம் கவரப்பட்டீர்கள். வாழ்க்கையில் அனைத்தும் பெற வாழ்த்துகள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

நீ ஒரு போர்வீரன்

தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்கின் வாழ்த்துகளும் யுவராஜை சென்றடைந்து இருக்கிறது. அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனது போராட்ட இளவரசனே... களத்திலும், வெளியிலும் ஒரு உண்மையான போர்வீரன். உமது வாழ்க்கையில் நீ நிகழ்த்திய சாதனைகள் என்றும் நிலைத்திருக்கும், என்றும் உங்களை நேசிக்கும் சகோதரன் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

இளம் வீரர்கள் வாழ்த்து

இளம் வீரர்கள் வாழ்த்து

அவர்கள் தவிர வெளிநாடுகளின் ஜாம்பவான்களான டீன் ஜோன்ஸ், டாம் மூடி, ஷான் டைட் உள்ளிட்ட பலரும் யுவியின் சாதனை பகிர்ந்து பாராட்டி இருக்கின்றனர். இந்திய அணியின் இளம் வீரர்களாக ரிஷப் பன்ட், ஓஜா, ரோஹன் கவாஸ்கர், ஆர்பி சிங், பும்ரா, பார்த்தீவ் படேல், உத்தப்பா, பத்ரிநாத் உள்ளிட்ட பலரும் அவரது சாதனைகளை நினைவு கூர்ந்திருக்கின்றனர்.

Story first published: Monday, June 10, 2019, 18:59 [IST]
Other articles published on Jun 10, 2019
English summary
Reaction of cricket players after the announcement of yuvraj retirement.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X