“பும்ரா எனக்கு வேண்டாம்”.. ரோகித் சர்மா எடுத்த தடாலடி முடிவு.. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மாற்றம்!

மும்பை: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் ஜஸ்பிரித் பும்ரா வேண்டாம் என ரோகித் சர்மா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்காவுடனான மோசமான தோல்விக்கு பிறகு இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணியுடம் மோதவுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அந்த அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு கேப்டன் மாற்றம்- ரோகித் நிலை என்ன? யாருக்கு எல்லாம் வாய்ப்பு.. BCCI தகவல்வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு கேப்டன் மாற்றம்- ரோகித் நிலை என்ன? யாருக்கு எல்லாம் வாய்ப்பு.. BCCI தகவல்

 இந்திய அணி

இந்திய அணி

இதற்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்வதில் தான் பிசிசிஐ மும்முரமாக ஈடுபட்டுள்ளது. காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, முழு உடற்தகுதியுடன் கம்பேக் கொடுத்துள்ளார். அணித்தேர்வுகாக மும்பையில் நடைபெறும் கூட்டத்தில் அவர் தனக்கு தேவையான வீரர்களை கேட்டு வாங்கியுள்ளதாக தெரிகிறது.

ரோகித்தின் முடிவு

ரோகித்தின் முடிவு

இந்நிலையில் அந்த பட்டியலில் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வேண்டாம் எனக்கூறியிருப்பதாக தெரிகிறது. இதற்கு காரணம் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் பும்ராவின் செயல்பாடுகள் தான். அந்த அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் விக்கெட்கள் மற்றும் ரன்களை கட்டுப்படுத்துவது என இரண்டிலுமே சற்று மோசமாக இருந்தார்.

 என்ன காரணம்

என்ன காரணம்

பவர் ப்ளே ஓவர்களில் விக்கெட் எடுப்பதில் பும்ரா கில்லாடி, ஆனால் அவரால் அங்கு எதுவுமே செய்ய முடியவில்லை. பும்ராவை பற்றி நன்கு அறிந்த ரோகித் சர்மா ,இதே மனநிலையுடன் அவரை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடவைக்க விரும்பவில்லை. பும்ராவுக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு கொடுத்துவிட்டு, இலங்கை தொடர் முதல் மீண்டும் சேர்த்துக்கொள்ளலாம் எனக்கூறியுள்ளதாக தெரிகிறது.

India ODI, T20I Squads vs WI: Rohit to lead, Kuldeep, Bishnoi get call | OneIndia Tamil
மாற்று வீரர்கள் யார்

மாற்று வீரர்கள் யார்

இதே போல ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார் போன்ற சீனியர் வீரர்களும் இந்திய அணியில் இடம்பெற போவதில்லை எனத்தெரிகிறது. இவர்களுக்கு மாற்றாக இளம் வீரர்கள் பிரஷித் கிருஷ்ணா, ராகுல் சஹார் போன்றோரை பயன்படுத்த ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளார். இதனை பிசிசிஐயும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Reports Says Rohit sharma doesn't want Jasprit bumrah in team india squad for west indies series
Story first published: Wednesday, January 26, 2022, 18:19 [IST]
Other articles published on Jan 26, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X