For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்

மும்பை: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவை போல ஒரு வீரரை பார்த்ததே கிடையாது என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிப் பாண்டிங் புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் ஏன் சிறப்பாக உள்ளார் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

2022ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்திய கிரிக்கெட்டில் அதிகப்படியான ரசிகர்கள் உச்சரித்து வரும் பெயர் என்றால் அது சூர்யகுமார் யாதவ் தான். அவர் களத்திற்கு வந்தாலே எப்படி சமாளிப்பது என தெரியவில்லை என பவுலர்கள் திணறுவதை பார்க்கிறோம்.

2022ம் ஆண்டு மட்டும் 31 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் 1,164 ரன்களை விளாசியிருந்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 187.43 என அட்டாகாசமாக உள்ளது. இதனால் தான் இவரை இந்தியாவின் ஏபிடி என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

“சூர்யகுமார் இல்லாமல் இனி இந்திய அணி இல்லை” ரெய்னாவின் புகழ்ச்சி வார்த்தைகள்.. ரசிகர்கள் வியப்பு “சூர்யகுமார் இல்லாமல் இனி இந்திய அணி இல்லை” ரெய்னாவின் புகழ்ச்சி வார்த்தைகள்.. ரசிகர்கள் வியப்பு

டெஸ்ட் வாய்ப்பு

டெஸ்ட் வாய்ப்பு

டி20 கிரிக்கெட்டில் கலக்கிய சூர்யகுமார் யாதவ் அடுத்ததாக 50 ஓவர் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்களிலும் தடம் பதித்து வருகிறார். நியூசிலாந்து தொடரில் முழுமையாக வாய்ப்பை பெற்ற சூர்யகுமார் யாதவ், அடுத்த மாதம் வரவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தேர்வாகியுள்ளார். மற்ற வடிவங்களில் இவர் எப்படி செயல்பட போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ரிக்கிப் பாண்டிங் வியப்பு

ரிக்கிப் பாண்டிங் வியப்பு

இந்நிலையில் சூர்யகுமாரின் திறமை குறித்து ரிக்கிப் பாண்டிங் வியப்படைந்துள்ளார். அதில், ஆட்டத்தின் சிந்தனைகள், திறமைகளை வைத்து பார்த்தால் டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவை போல ஒரு வீரரை நான் பார்த்ததே இல்லை. உலகில் பல்வேறு வீரர்கள் செய்ய முயற்சித்து வரும் விஷயங்களை சூர்யகுமார் அசால்ட்டாக செய்துவிட்டு, அடுத்த சவால்களுக்கு சென்றுவிடுகிறார்.

ஐபிஎல் தாக்கம்

ஐபிஎல் தாக்கம்

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் செய்வதை போலவே நிறைய வீரர்கள் செய்ய முயற்சிப்பார்கள் என நான் கேள்விப்பட்டு வருகிறேன். இது கேட்பதற்கே எவ்வளவு நன்றாக உள்ளது. 360 டிகிரியிலும் அடிக்கிறார் என நாம் பேசி வருகிறோம். ஆனால் விக்கெட் கீப்பருக்கு பின்னால் அவர் அடிக்கும் சிக்ஸர்கள், ஃபைன் லெக் திசையில் அடிக்கும் ஷாட்கள் அவரின் பெயரை கூறும் அளவிற்கு உள்ளது.

உடற்தகுதி

உடற்தகுதி

சூர்யகுமார் 5 - 6 ஆண்டுகளாக ஐபிஎல்-ல் விளையாடி வருகிறார். ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். இந்திய அணியில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், போன்று சூர்யகுமாரும் தரமான ஃபிட்னஸுடன் இருக்கிறார். இப்படியே இருந்தால் நிச்சயம் ஒரு அசைக்க முடியாத வீரராக உருவெடுப்பார் என ரிக்கிப் பாண்டிங் கூறியுள்ளார்.

Story first published: Friday, January 27, 2023, 16:56 [IST]
Other articles published on Jan 27, 2023
English summary
Former Australian cricketer Ricky ponting hails suryakumar yadav's batting skills ahead of India vs new zealand t20 series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X