For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்பவே நினைச்சேன்.. மொக்கை பேட்டிங்கோட இந்தியா ஜெயிக்காதுன்னு.. ரிக்கி பாண்டிங் “ஒரே குஷி”

மெல்போர்ன் : இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சம நிலையில் உள்ளன. இந்த தொடருக்கு முன் பலரும் இந்தியா தான் தொடரை வெல்லும் என கூறிய நிலையில், இப்போது நிலைமை மாறியுள்ளது.

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், தன் அணி வெற்றி பெற்றதில் குஷியாக இருக்கிறார். இரண்டு அணிகளின் அடுத்த கட்டத்தை பற்றி பேசினார்.

பலவீனமான இந்திய பேட்டிங்

பலவீனமான இந்திய பேட்டிங்

"தொடருக்கு முன் இந்தியா - ஆஸ்திரேலியா இரு அணிகளையும் ஒப்பிட்டு பார்த்த போது, இந்தியா நிச்சயம் தன் பலவீனமான பேட்டிங்கை வைத்துக் கொண்டு இங்கே வெல்ல முடியாது என நினைத்தேன். அதை தான் நாம் கடந்த வாரம் பார்த்தோம்" என இந்திய அணியின் மோசமான பேட்டிங் வரிசை பற்றி குறிப்பிட்டார்.

இந்தியா சொதப்பல் பேட்டிங்

இந்தியா சொதப்பல் பேட்டிங்

புஜாரா, கோலி, ரஹானே தவிர எந்த வீரரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடவில்லை. மேலும், இந்தியா தற்போது இந்தியா மாயங்க் அகர்வால் மற்றும் ஹர்திக் பண்டியாவை அணியில் சேர்த்து இருப்பதையும் சுட்டிக் காட்டி இந்தியா குழப்பத்தில் உள்ளது என கூறினார். முரளி விஜய் - ராகுல் இருவரும் சரியாக ஆடாத நிலையில், அடுத்த போட்டியில் இவர்களில் ஒருவர் தங்கள் வாய்ப்பை இழக்க நேரிடும்.

மிடில் ஆர்டர் குழப்பம்

மிடில் ஆர்டர் குழப்பம்

அதே போல, மிடில் ஆர்டரில் ரோஹித் சர்மா, ஹனுமா விஹாரி இருவரோடு ஹர்திக் பண்டியாவும் சேர்ந்துள்ளார். இவர்களில் யாரை அணியில் சேர்ப்பது என்ற குழப்பம் உள்ளது. இதையும் சுட்டிக் காட்டியுள்ளார் பாண்டிங்.

மெல்போர்ன் போட்டி பற்றி..

மெல்போர்ன் போட்டி பற்றி..

மெல்போர்ன் ஆடுகளம் இந்திய அணிக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணி உஷாராக இருக்க வேண்டும் என தன் அணி வீரர்களுக்கு யோசனையும் கூறினார். எனினும், ஆஸ்திரேலியா வெற்றி பெற்று விட்டதால் நம்பிகையுடன் இனி டெஸ்ட் தொடரை எதிர்கொள்ளும் எனவும் தெரிவித்தார் ரிக்கி பாண்டிங்.

Story first published: Thursday, December 20, 2018, 19:31 [IST]
Other articles published on Dec 20, 2018
English summary
Ricky Ponting says India haven’t got long to turn things around before third test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X