For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடும் சண்டை, முட்டிக்கொண்ட ரவி சாஸ்திரியும், கோலியும்..! காரணம் அந்த 5 பேர்.. விஷயம் இதுதான்..!

Recommended Video

Kohli influenced Ravi Shastri | ரவி சாஸ்திரி தேர்வு விவகாரம் :புட்டு புட்டு வைக்கும் ரசிகர்கள்!

மும்பை: இந்திய அணியில் வலிமை மற்றும் கண்டினஷிங் பயிற்சியாளர்களை நியமிக்கும் விவகாரத்தில் கோலிக்கும், ரவி சாஸ்திரிக்கும் முட்டிக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்களை நியமிக்கும் படலம் இன்னும் முடிய வில்லை. ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளர், பேட்டிங் கோச் பரத் என ஏற்கனவே இருந்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். சஞ்சய் பங்கர் மட்டும் கழற்றிவிடப்பட்டார். காரணம் தோனியின் பேட்டிங் ஆர்டரை அச்சுர சுத்தமாக குழப்பி வைத்த விவகாரம் தான்.

ஆனால், பிசியோதெரபிஸ்ட், வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் ஆகிய பதவிகள் இன்னும் நிரப்பப்படவில்லை. அவர்களின் பதவிக்காலம் எப்போதோ முடிந்து விட்டது. தற்போது, புதியவர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை பிசிசிஐ பெற்றது.

5 பேரிடம் நேர்காணல்

5 பேரிடம் நேர்காணல்

மற்ற பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், பிசியோ, வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் ஆகியோர் இன்னும் தேர்வாகவில்லை. இந்த பதவிகளுக்கான இண்டர்வியூ 5 பேரிடம் நடத்தப்பட்டது.

3 பேர் வெளிநாட்டினர்

3 பேர் வெளிநாட்டினர்

அவர்களில் 3 பேர் வெளிநாட்டினர். லூக் உட்ஹவுஸ், க்ராண்ட் லூடன் மற்றும் நிக் வெப் ஆகியோர் தான் அவர்கள். இந்த 3 வெளிநாட்டினர் தவிர ரஜினிகாந்த் சிவஞானன் மற்றும் ஆனந்த் ஆகிய இருவரும் இந்தியர்கள்.

தேர்வுக்குழு திருப்தி

தேர்வுக்குழு திருப்தி

அவர்களிடம் இண்டர்வியூ நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், வெளி நாட்டினர் அளித்த பதில்கள், அவர்களின் திட்டம் உள்ளிட்டவை தேர்வுக்குழுவை அதிகம் கவர்ந்தது. பிசிசிஐயும் அதிக திருப்தியடைந்துள்ளது.

இருவரிடையே முரண்பாடு

இருவரிடையே முரண்பாடு

ஆனால் இதுகுறித்து கருத்து கேட்டபோது, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கேப்டன் கோலியும் முரண்பட்டுள்ளனர். இந்தியர் ஒருவரை நியமிக்குமாறு ரவி சாஸ்திரி வலியுறுத்தி இருக்கிறார். ஆனால், வெளிநாட்டவராக இருந்தாலும் பரவாயில்லை, யார் சிறந்தவரோ அவரை தேர்ந்தெடுங்கள் என்று கூறி இருக்கிறார்.

பெரும் சிக்கல்

பெரும் சிக்கல்

அவரது பரிந்துரையில் தான் இப்போது சிக்கல் எழுந்திருக்கிறது. மற்ற பயிற்சியாளர்கள் சொந்த நாட்டினராக இருக்க வேண்டும் என்பது தனி தகுதியாக பார்க்கப்பட்டது. இப்போது, சிறந்தவர் யார்? அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் வாய்ப்பு கொடுக்கலாம் என்று கேப்டன் கோலி நினைக்கிறார்.

கருத்து மோதல்

கருத்து மோதல்

அதை வழக்கம் போல தமது பேட்டிங் ஸ்டைல் போன்றே ரவி சாஸ்திரியிடம் அதிரடியாக கூறியிருக்கிறார். இந்த வேகத்தை எதிர்பார்க்காத ரவி சாஸ்திரி சற்றே அதிர்ந்துவிட்டார் என்று சொல்லலாம். இந்த மாறுபட்ட கருத்தால் இருவரிடமும் கடும் கருத்து மோதல் நிலவி வருகிறது.

Story first published: Wednesday, September 4, 2019, 19:50 [IST]
Other articles published on Sep 4, 2019
English summary
Rift between kohli and coach ravi shastri over strength and conditioning coach appointment.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X