For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்று 173 பந்துகளில் 264 ரன்கள் குவித்த ரோஹித்! அன்று 174 பந்துகளில் வெறும் 36 ரன் எடுத்த கவாஸ்கர்!!

By Mathi

கொல்கத்தா: இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் 173 பந்துகளில் 264 ரன்களைக் குவித்து இந்திய வீரர் ரோஹித் சர்மா உலக சாதனை படைத்தை நாடே கொண்டாடி வருகிறது. இந்த நேரத்தில் 39 ஆண்டுகளுக்கு முன்னர் 174 பந்துகளில் வெறும் 36 ரன்களைக் குவித்த 'ஜாம்பவானை'யும் கிரிக்கெட் ரசிகர்கள் நினைவு கொள்ள தவறவில்லை.

கொல்கத்தாவின் ஈடன் மைதானம் அதிர அதிர 174 பந்துகளில் இரட்டை சதமடித்து, அதிக ரன்களைக் குவித்து 5 உலக சாதனைகளைப் படைத்தார் ரோஹித் சர்மா. இதில் 33 பவுண்டரிகள், 9 சிக்சர்களும் அடங்கும்.

60 ஓவர்கள் போட்டி

60 ஓவர்கள் போட்டி

கடந்த 39 ஆண்டுகளுக்கும் முன்னர் முதலாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. அப்போது ஒருநாள் போட்டிக்கு 60 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 1975ஆம் ஆண்டு ஜூன் 7-ந் தேதி இங்கிலாந்துடன் இந்திய அணி மோதியது.

334 குவித்த இங்கிலாந்து-

334 குவித்த இங்கிலாந்து-

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 60 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன்களைக் குவித்தது.

132-ல் சுருண்ட இந்தியா

132-ல் சுருண்ட இந்தியா

பின்னர் ஆடிய இந்திய அணியோ 3 விக்கெட் இழப்புக்கு வெறும் 132 ரன்களைத்தான் எடுத்தது.

174 பந்தில் 36 ரன் தொட்ட கவாஸ்கர்

174 பந்தில் 36 ரன் தொட்ட கவாஸ்கர்

இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய கவாஸ்கர் 60 ஓவரையும் தாக்குப் பிடித்து நின்று அவுட் ஆகாமல் இருந்தார். அவர் எதிர்கொண்ட பந்துகள் எண்ணிக்கை 174. அடித்த ரன்களின் எண்ணிக்கையோ வெறும் 36. இதில் ஒரே ஒரு பவுண்டரியும் கூட. அப்போது இந்திய அணியில் ஜி.ஆர். விஸ்வநாத் அதிகபட்சமாக 37 ரன்களை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செம்ம்ம்ம "கட்ட" ஆட்டம்பா!

Story first published: Friday, November 14, 2014, 13:47 [IST]
Other articles published on Nov 14, 2014
English summary
Rohit Sharma blasted his way into record books with a brilliant 264 off 173 balls at the Eden Gardens yesterday (November 13). But, 39 years back, an Indian legend took more number of deliveries than Rohit's and do you know how much he managed to score in a ODI? We are talking about former India captain Sunil Gavaskar's infamous 36 not out at Lord's against England in the inaugural World Cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X