For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சதங்களின் சாதனை நாயகன்... ஒரே நாளில் 2 சாதனைகள்... கிரிக்கெட் உலகை தெறிக்க விட்ட இந்திய வீரர்

Recommended Video

WORLD CUP 2019 IND VS BAN | ஒரே நாளில் 2 சாதனைகள்! புதிய உயரம் தொட்ட ரோஹித் சர்மா

எட்ஜ்பாஸ்டன்: நடப்பு உலக கோப்பையில் 4 சதங்கள் அடித்து சங்கக்காராவின் சாதனையை சமன் செய்திருக்கிறார் ஹிட் மேன் ரோகித் சர்மா.

உலக கோப்பை தொடரில் 40வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் இரு அணிகளும் களம் இறங்கியுள்ளன. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. துவக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கி வங்கதேச பவுலிங் அடித்து துவைத்து காய வைத்தனர்.

ரோகித் சர்மா வழக்கம்போல தனது அதிரடி பேட்டிங்கை துவக்கத்திலிருந்தே ஆரம்பித்து வைத்தார். மறுமுனையில், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி உறுதுணையாக இருந்தார் ராகுல். எளிதில் இருவரும் அரைசதம் கடந்தனர்.

ரன்ரேட் உயர்வு

ரன்ரேட் உயர்வு

முதல் விக்கெட்டை காலி செய்ய வங்கதேசம் எவ்வளவோ முயற்சித்தது. ஆனால் பலன் கிடைக்கவில்லை. ரன்கள், சிக்சர்களாகவும், பவுண்டரிகளும் அடித்து ரன் ரேட்டை உயர்த்தினார் ரோகித் சர்மா.

4வது சதம் சாதனை

4வது சதம் சாதனை

தொடர்ந்து களத்தில் நிலையாக நின்று, உலக கோப்பையில் 4 வது சதத்தை பூர்த்தி செய்தார். அதன் மூலம் ஒரு உலக கோப்பையில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சங்கக்காராவின் சாதனையை சமன் செய்தார். 2015ஆம் ஆண்டு உலக கோப்பையில் சங்கக்காரா 4 சதங்கள் அடித்திருந்தார்.

500 ரன்கள், 2வது வீரர்

500 ரன்கள், 2வது வீரர்

வங்கதேசத்துக்கு எதிரான சதத்தின் மூலம், நடப்பு உலக கோப்பையில் 500 ரன்களையும் கடந்தார். இதன் மூலம் ஒரு உலக கோப்பையில் 500 ரன்களுக்கு மேல் அடித்த 2வது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 1996 மற்றும் 2011ம் ஆண்டு உலக கோப்பைகளில் 500 ரன்களை கடந்து இருந்தார்.

சிக்சர்கள் சாதனை

சிக்சர்கள் சாதனை

சதம் சாதனையுடன் அவர் மற்றொரு சாதனையையும் படைத்திருக்கிறார். இன்றைய போட்டியில் 5 சிக்சர்கள் அடித்துள்ள ரோகித், ஒருநாள் அரங்கில் 230 சிக்சர்கள் அடித்து, அதிக சிக்சர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். அவர் தோனியின் 228 சிக்சர்கள் சாதனையை கடந்து, அதிக சிக்சர்கள் அடித்த இந்தியர்களில் முதலிடம் பிடித்துள்ளார்.

சிக்சர்கள் பட்டியல்

சிக்சர்கள் பட்டியல்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், முதலிடத்தில் சாகித் அப்ரிடி (351 சிக்சர்கள்) உள்ளார். 2வது இடத்தில் கிறிஸ் கெயில்(326 சிக்சர்கள்), 3வது இடத்தில் ஜெயசூர்யா( 270 சிக்சர்கள்) உள்ளனர். 4வது இடத்தில் ரோகித் சர்மா (230 சிக்சர்கள்), 5வது இடத்தில் தோனி(228 சிக்சர்கள்) உள்ளனர்.

Story first published: Tuesday, July 2, 2019, 19:17 [IST]
Other articles published on Jul 2, 2019
English summary
Rohit sharma equals kumar sangakkara record in world cup series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X