For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"நியூசிலாந்து அணியில் நிறவெறி கொடுமை".. ராஸ் டெய்லர் பரபரப்பு குற்றச்சாட்டு.. இவ்வளவு வேதனைகளா??

நியூசிலாந்து அணியில் நிறவெறி கொடுமைகள் உள்ளதாக ராஸ் டெய்லர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர்களின் பட்டியலில் டாப் வரிசையில் இருக்ககூடிய வீரர் ராஸ் டெய்லர்.

38 வயதாகும் ராஸ் டெய்லர் கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்

 ராஸ் டெய்லர்

ராஸ் டெய்லர்

கடந்த 2006ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான டெய்லர், கடந்த 16 ஆண்டுகளாக நியூசிலாந்து அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். 112 டெஸ்ட் , 236 ஒருநாள் கிரிக்கெட், 102 டி20 என மொத்தமாக 450 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 18,195 ரன்களை குவித்துள்ளார். இத்தகைய பெருமை மிகுந்த வீரரான ராஸ் டெய்லர் தனது சுயசரிதையை எழுதி வெளியிட்டுள்ளார்.

நிறவெறி

நிறவெறி

அந்த புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ள ஒரு வார்த்தைகள் தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நியூசிலாந்தில் கிரிக்கெட்டில் வெள்ளையாக இருப்பவர்கள் தான் அதிகமாகும். நான் மட்டுமே மாநிறத்தை கொண்டவன். பெரும்பாலான போட்டிகளில் வெள்ளை நிற வரிசையில் நான் மட்டும் வேறு நிறத்தில் இருந்தது சவாலாக இருந்தது.

ஓய்வு அறையில் விமர்சனம்

ஓய்வு அறையில் விமர்சனம்

ஓய்வு அறையில் பல சமயங்களில் நிறம் குறித்த விமர்சனங்களை சந்தித்துள்ளேன். அவர்களின் விமர்சனம் என்னை காயப்படுத்திய போதும் நான் அதனை பெரிதுபடுத்தவில்லை. ஏனென்றால் அந்த சூழலில் அதனை பெரிதுபடுத்தினால் பிரச்சினை மோசமாகும் என்பதால் பொறுத்துக்கொண்டு கடந்து வந்துள்ளேன்.

Recommended Video

Ben Stokes சொன்ன ODI Retirement காரணம் *Cricket
இரட்டை அர்த்தம்

இரட்டை அர்த்தம்

சக வீரர் ஒருவர் என்னிடம், ராஸ் நீங்கள் பாதி நல்லவன் என அடிக்கடி கூறுவது வழக்கம். ஆனால் அவர் பாதி நல்லவர் என்று சொல்வதன் உண்மையான அர்த்தம் எனக்கு மட்டுமே புரியும். இதுபோன்ற இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளால் பலமுறை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளேன். ஆனால் வெளியில் இருப்பவர்களுக்கு அது சகஜமான ஒரு கேலி பேச்சாக மட்டுமே தெரிகிறது என ஆதங்கத்துடன் ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.

Story first published: Friday, August 12, 2022, 11:43 [IST]
Other articles published on Aug 12, 2022
English summary
Ross Taylor Reveals Racism in newzealand cricket team ( நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் நிறவெறி ) நியூசிலாந்து அணியில் நிறவெறி கொடுமை இருந்ததாக முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X