ஐபிஎல்: ராஜஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஐதராபாத்!

Posted By:
ஹைதராபாத்தின் பந்துவீச்சில் திணறிய ராஜஸ்தான்

ஐதராபாத்: ஐபிஎல் போட்டிகளில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. ஐபிஎல் போட்டியில் இரண்டாண்டுகளுக்குப் பிறகு களமிறங்கியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. மிகவும் சுலபமான இலக்கை, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 15.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து அடைந்தது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி 11வது சீசன் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது.

தோல்வியின் விளிம்புக்கு சென்ற நிலையில், கடைசி ஓவர்களில் பிராவோவின் அதிரடி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. இரண்டாண்டுகள் தடையில் இருந்து திரும்பியுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே நிறைவேற்றியது.

அதேபோல் இரண்டாண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று களமிறங்கியது. 2008ல் நடந்த முதல் சீசனில் ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்பிறகு ஒருமுறைகூட இறுதிப் போட்டிக்கு அந்த அணி முன்னேறியதில்லை. 2016ல் சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத், கடந்தாண்டு எலிமினேட்டர் சுற்றில் வெளியேறியது.

துவக்கத்திலேயே பிரச்னை

துவக்கத்திலேயே பிரச்னை

இரண்டு அணிகளுமே கேப்டன்கள் பிரச்னையில் சிக்கின. சமீபத்தில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியின்போது, பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. அதையடுத்து, டேவிட் வார்னர் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித், பந்து சேதப்படுத்திய விவகாரத்தால் நீக்கப்பட்டார். அதையடுத்து அஜிங்யா ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

150வது போட்டியில் பதான்

150வது போட்டியில் பதான்

இன்றைய போட்டி, சன் ரைசர்ஸ் அணியின் யூசுப் பதானுக்கு 150வது போட்டியாகும். டாஸை வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பவுலிங்கை தேர்வு செய்தார். இதுவரை நடந்துள்ள மூன்று ஆட்டங்களிலும் டாஸை வென்ற அணி, எதிரணியை பேட்டிங் செய்யும்படி கூறியுள்ளது. அதேபோல் டாஸ் வென்ற அணியே மூன்று ஆட்டங்களிலும் வென்றுள்ளது. அந்த டாஸ் ராசி இந்தப் போட்டியிலும் பலித்துள்ளது.

ரன் குவிக்க திணறல்

ரன் குவிக்க திணறல்

முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. முதல் ஓவரிலேயே ஆர்சி ஷார்ட் அவுட்டானார். கேப்டன் ரஹானே, சஞ்சு சாம்சன் ஜோடி சற்று நிலைத்தது. ரஹானே 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒரு முனையில் சஞ்சு சாம்சன் நிலைத்து நிற்க, எதிர்முனையில் தொடர்ந்து விக்கெட் விழுந்தது. சாம்சன் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் எடுத்தது.

சுலபமான வெற்றி

சுலபமான வெற்றி

பின்னர் விளையாடிய ஐதராபாத் அணி 15.5 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து, 127 ரன்கள் எடுத்து வென்றது. ஷிகார் தவன் அதிரடியாக விளையாடிய 77 ரன்கள் குவித்தார். அவர் 57 பந்துகளில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசினார். கேப்டன் கேன் வில்லியம்சன் 35 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விருத்தமான் சாகா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
SRH win with ease against RR. Toss sentiment worked again
Story first published: Monday, April 9, 2018, 20:04 [IST]
Other articles published on Apr 9, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற