For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாரு சாமி நீ.. ருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் கெயிக்வாட்.. ஆச்சரியத்தில் வாயடைத்த எதிரணி- முழு விவரம்

அகமதாபாத்: விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெயிக்வாட் காட்டிய அதிரடியால் கிரிக்கெட் உலகமே ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளது.

இந்தியாவின் மிகவும் பிரபலமான உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இன்று மகாராஷ்டிரா மற்றும் சௌராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா பந்துவீச்சை தேர்வு செய்தது.

கேப்டன்சியில் தோனியின் ஜெராக்ஸ்.. ருதுராஜ் கெயிக்வாட் வியப்பளிக்கிறார்.. மகாராஷ்டிரா வீரர் புகழாரம்!கேப்டன்சியில் தோனியின் ஜெராக்ஸ்.. ருதுராஜ் கெயிக்வாட் வியப்பளிக்கிறார்.. மகாராஷ்டிரா வீரர் புகழாரம்!

 இறுதிச்சுற்று

இறுதிச்சுற்று

இதனையடுத்து களமிறங்கிய டாப் ஆர்டர் வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேற, மறுபுறம் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் மட்டும் வழக்கம் போல தூணாக நின்றார். நிதானமாக விளையாடி வந்த அவர், 96 பந்துகளை சந்தித்து அரைசதத்தை பூர்த்தி செய்தார். ரன்ரேட் குறைவாக உள்ளது என ரசிகர்கள் நினைத்த அந்த தருணத்தில் தான் டாப் கியருக்கு சென்றார் ருதுராஜ் கெயிக்வாட்.

அட்டகாச சதம்

அட்டகாச சதம்

முதல் 61 பந்துகளை சந்தித்து வெறும் 19 ரன்களை மட்டுமே அடித்திருந்த அவர், 125 பந்துகளில் 102 ரன்களை விளாசினார். அதாவது அடுத்த 64 பந்துகளில் 83 ரன்களை ஒரே அடியாக விளாசியுள்ளார். நடப்பு தொடரில் அவர் அடிக்கும் 4வது சதம் இதுவாகும். அதுவும் கடைசி 5 இன்னிங்ஸ்களில் 4வது சதம் இது என்றால் நம்ப முடிகிறதா?? இதில் 3 நாக் அவுட் போட்டிகளில் ஆகும்.

இரட்டை சதம் விளாசல்

இரட்டை சதம் விளாசல்

காலிறுதிப்போட்டியில் உத்தரபிரதேசத்திற்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடிய ருதுராஜ் கெயிக்வாட் 159 பந்துகளில் 220 ரன்கள் என இரட்டை சதத்தை விளாசியிருந்தார். இதில் தான் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் என விளாசி சாதனை படைத்திருந்தார். இதன்பின்னர் அரையிறுதிப்போட்டியில் அசாம் அணிக்கு எதிராக 126 பந்துகளில் 168 ரன்களை அடித்து அசத்தினார். இப்படி இருக்கையில் தான் தற்போது இறுதிப்போட்டியிலும் சதம் பறந்துள்ளது.

எனினும் ஒரு குறை

எனினும் ஒரு குறை

சௌராஷ்டிராவுக்கு எதிராக வெற்றிகரமாக சதத்தை பூர்த்தி செய்த போதும், அவரால் இன்னிங்ஸை முடித்துக்கொடுக்க முடியவில்லை. 131 பந்துகளில் 108 ரன்கள் அடித்திருந்த போது ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். சிஎஸ்கேவின் எதிர்காலமாக பார்க்கப்படும் ருதுராஜ் கெயிக்வாட், இப்படி ஆடுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Friday, December 2, 2022, 13:06 [IST]
Other articles published on Dec 2, 2022
English summary
CSk Star Ruturaj gaikwad Again smashes a century in Vijay hazare Final match between Saurashtra vs Maharashtra
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X