For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது அநியாயம்.. செம பார்மில் இருக்கார்.. பேட்டிங் ஆவரேஜ் 100+.. இவருக்கு டீமில் இடம் கிடையாதா?

மும்பை : ருதுராஜ் கெயிக்வாட் என்ற இளம் இந்திய வீரர் இந்தியா ஏ அணியில் நல்ல பார்மில் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்காதது குறித்து சிலர் புகார் கூறி வருகிறார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், மிகச் சிலருக்கே வாய்ப்பு கிடைத்தது.

அவர்களும் ஏற்கனவே அணியில் இடம் பெற்ற வீரர்களாகவே இருந்தார்கள். இந்த நிலையில் தான் சூப்பர் பார்மில் இருக்கும் ருதுராஜ் கெயிக்வாட் பற்றிய ஆச்சரியம் அளிக்கும் புள்ளிவிவரம் வெளியானது.

2 வருடங்கள் முன்பு நடந்த அந்த சம்பவம்.. ரோஹித் சர்மா - கோலி முட்டிக் கொள்ள அது தான் காரணம்! 2 வருடங்கள் முன்பு நடந்த அந்த சம்பவம்.. ரோஹித் சர்மா - கோலி முட்டிக் கொள்ள அது தான் காரணம்!

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு குறைவு

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு குறைவு

வெஸ்ட் இண்டீஸ்ட் தொடரில் கலீல் அஹ்மது, நவ்தீப் சைனி, ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பந்த் ஆகிய இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றனர். இவர்களில் நவ்தீப் சைனி தவிர மற்றவர்கள் ஏற்கனவே. இந்திய அணியில் அவ்வப்போது ஆடியவர்கள் தான். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில்லுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

யார் ருதுராஜ் கெயிக்வாட்?

யார் ருதுராஜ் கெயிக்வாட்?

இந்த நிலையில் 22 வயதான ருதுராஜ் கெயிக்வாட் ஷுப்மன் கில்லை விட சிறந்த பார்மில் இருக்கிறார் என்கிறது ஒரு புள்ளி விவரம். ருதுராஜ் கெயிக்வாட் புனேவை சேர்ந்தவர். லிஸ்ட் ஏ போட்டிகள், முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார்.

அசத்தல் பார்ம்

அசத்தல் பார்ம்

கடந்த ஜூன் மாதம் முதல் இந்தியா ஏ அணியில் இணைந்து இலங்கை ஏ மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு எதிராக உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் ஆடினார். இந்த இரண்டு மாதங்களில் மட்டும் 8 போட்டிகளில் 677 ரன்கள் குவித்தார்.

பேட்டிங் சராசரி

பேட்டிங் சராசரி

இந்த 8 போட்டிகளுக்கான பேட்டிங் சராசரி 112.33 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 116.72. இதில் இரண்டு சதங்கள், இரண்டு அரைசதங்கள் அடங்கும். அதிலும் ஒருமுறை 99 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதிகபட்ச ரன்கள் 187*.

இவருக்கு இடம் இல்லையா?

இவருக்கு இடம் இல்லையா?

இத்தனை சிறப்பாக ஆடியும் ருதுராஜுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கவில்லை என கூறி வருகிறார்கள் சிலர். உள்ளூர் போட்டிகளில் ஆடும் வீரர்கள் நல்ல பார்மில் இருக்கும் போதே சர்வதேச போட்டிகளில் ஆடினால் தான் சரியான பங்களிப்பை அளிக்க முடியும். வெஸ்ட் இண்டீஸ் ஏ தொடரில் சிறப்பாக ஆடிய ருதுராஜை அணியில் சேர்த்து ஒரீரு போட்டிகளில் ஆட வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

Story first published: Friday, July 26, 2019, 16:01 [IST]
Other articles published on Jul 26, 2019
English summary
Ruturaj Gaikwad is in phenomenal form but yet to get chance in Indian team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X